மத்திய அமைச்சரவையாக இருந்தாலும் மாநில அமைச்சரவை யாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான செயல் என்றால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பதில் நக்கீரன் இதழுக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
கடந்த 100 ஆண்டுகளில் தமிழ்ப் பத்திரிகை நடத்துபவர்கள் மீசையை மழித்து வட இந்தியர்போல அல்லது வெள்ளைக்காரர்கள்போல இருந்தால்தான் மிகச்சிறந்த அறிவாளி, மிகச்சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்ற தோற்றம் இருந்தது. இல்லை... இல்லை... எங்க ஊரு அய்யனார்சாமி போல தோற்றம் உடையவர்கள்கூட மிகச்சிறந்த அறிவாளிகள்தான், பத்திரிகை நடத்தி மிகப்பெரிய சாதனைகள் செய்ய முடியும் என்பதை இந்த தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தியவர் அண்ணன் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்கள்.
அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு தமிழக மக்களின் சார்பாக நின்று நியாயமான கேள்விகளை எழுப்பி, இன்று விசாரணை ஆணையம் அளவிற்கு சென்றிருக்கிறது என்றால், அந்த நேரத்தில் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்கள் முன்னெடுத்த செயல்பாடும் ஒரு காரணம்.
2018, ஆக.25-28 இதழ்:
நக்கீரன் இதழில் ஓ.பி.எஸ்.ஸின் புகைப் படமும் அழகிரியின் புகைப்படமும் அ.தி.மு.க., தி.மு.க.வில் நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே விளக்குகிறது. இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி குறித்து தமிழக அதிகாரிகளின் கேம்பசில் அமர்ந்து அவர்களின் நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து அந்த தகவலை சேகரித்துக்கொண்டு இறுதியாக, நாட்டிலுள்ள அனைத்து மக்கள் பிரச்சனைகளையும் ஒரே நாளில் அறிந்துகொள்ள ஒரு சாமானிய னால் முடியும் என்றால்... அது நக்கீரன் இதழை படிப்பதன் மூலமே முடியும்.
இந்த இதழில் சிறந்த, துல்லியமான செய்தி என்று பகுப்பாய்வு செய்ய முடியாத அளவிற்கு அனைத்துச் செய்தி களும் சிறப்பு.
வாசகர் கடிதங்கள்!
பொழுதுபோக்காகும் காமம்!
சமீபகாலமாக பாலியல் துன்புறுத்தல்கள் என்பது காமுகர்களுக்கு ஒரு பொழுது போக்காகி வருகிறது. திரு வண்ணாமலை விடுதியிலும் "அதே நிர்மலா' கதைதான். பாதிக்கப் பட்ட மாணவியை நிர்வாகம் வெளியேற்றியிருப்பது புகாருக் குரிய பேராசிரியர் தங்க பாண்டியன் நீக்கப்பட்டதற்கான ஒரு பழிவாங்கல்தான்.
-சரஸ்வதி கண்ணன், ஸ்ரீவைகுண்டம்.
லாட்டரி அரசியல்!
ஒரு நம்பர் லாட்டரி விளையாட்டிலும்கூட வட்டம், மாவட்டம் என அரசியல் ரேஞ்ச்சுக்கு ஏரியா ஏஜென்ட், மாவட்ட ஏஜென்ட்டுகளை நியமித்து இரவு விடிவதற்குள் லட்சங்களில் கல்லா கட்டிவிடுகிறார்கள். இதில் காவல்துறையின் பங்களிப்பையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.
-எம்.தினேஷ்கார்த்திக், திருமயம்.