பார்வை! -ஆர்.எஸ்.பாலமுருகன்

parvai

parvai

"குங்குமம்' வாரஇதழில் நிருபராக பணிபுரிந்தபோது அண்ணன், ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களை பேட்டி கண்டது பசுமையாக நினைவில் நிற்கிறது. வீரப்பன், ராஜ்குமார் குறித்த கேள்விகளுக்கெல்லாம் காலத்தில் பின்நோக்கி சென்று நினைவு கூர்ந்து தயக்கமின்றி பதில்கள் வழங்கினார். நக்கீரன் தொடக்கம், வளர்ச்சி, போராட்டம் பற்றி ஒரு மூத்த பத்திரிகையாளராக தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

திரைப்பட உலகில் நுழைய பத்திரிகைத்துறை ஒரு எளிய வழி என்கிற கணக்குடன் நிருபர் பணிக்கு வந்திருந்த என்னை அந்த பேட்டி திசை மாற்றி

parvai

"குங்குமம்' வாரஇதழில் நிருபராக பணிபுரிந்தபோது அண்ணன், ஆசிரியர் நக்கீரன்கோபால் அவர்களை பேட்டி கண்டது பசுமையாக நினைவில் நிற்கிறது. வீரப்பன், ராஜ்குமார் குறித்த கேள்விகளுக்கெல்லாம் காலத்தில் பின்நோக்கி சென்று நினைவு கூர்ந்து தயக்கமின்றி பதில்கள் வழங்கினார். நக்கீரன் தொடக்கம், வளர்ச்சி, போராட்டம் பற்றி ஒரு மூத்த பத்திரிகையாளராக தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

திரைப்பட உலகில் நுழைய பத்திரிகைத்துறை ஒரு எளிய வழி என்கிற கணக்குடன் நிருபர் பணிக்கு வந்திருந்த என்னை அந்த பேட்டி திசை மாற்றியது. அதுவரை சினிமா செய்திகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த நான், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். பத்திரிகைத் துறையில் இருந்தவரை இதை விடாமல் தொடர்ந்தேன்.

தமிழ் அரசியல் புலனாய்வு இதழ்களில் நக்கீரன் ஒரு டிரெண்ட் செட்டர். இதன் வெற்றி கொடுத்த நம்பிக்கையில் இதை அடியொற்றி வந்த ஏராளமான இதழ்கள் கடைகளில் தொங்குவதை இப்போதும் காணலாம். ஆனால் நக்கீரனிடம் இருக்கும் உண்மையும் மேன்மையும் என்னைக் கவர்வன.

2018, ஆக. 18-21 இதழ்:

அட்டைப்பட லே-அவுட்டில் நக்கீரனை யாரும் அடித்துக்கொள்ள முடியாது. இம்முறையும் அப்படியே. இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. யானைகள் பேசுவதாக எழுதப்பட்ட கட்டுரை, இதை அழுத்தமாக உணர்த்தி மனம் கனக்க செய்தது.

இதுவரை வெளிவராத ரகசிய தகவல்களுடன் விறுவிறுப்பாக அமைந்திருந்தது அட்டைப்பட கட்டுரை.

எனக்கு பூர்வீகம் திருவாரூர் மாவட்டம் என்பதால், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு திருவாரூர் சென்றேன். அங்கே கலைஞருக்காக, செல்வி அவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இடைத்தேர்தல் பற்றிய கட்டுரையைப் படித்ததும், இம்முறை செல்வி அவர்களுக்கு தி.மு.க. சீட் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

நக்கீரன் என்ற பெயருக்கு நியாயம் செய்யும் இதழாகவே வழக்கம்போல இந்த இதழும் அமைந்திருந்தது சிறப்பு.

வாசகர் கடிதங்கள்!

வெட்டாட்டம்!

கவர்னர் மாளிகைக்கு சர்ச்சைகளுக்கான ஆய்வுப் பட்டமே வழங்கலாம்போல. காவல்துறை அதிகாரிகளே தங்களுக்கான இருக்கைகளில் முன்னுரிமையை விரும்பவில்லை. ஆனால் இதில், கவர்னரின் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். தன்மீதுள்ள பழிச்சொற்களை மழுங்கடிப்பதற்காகவே காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே ஒரு வெட்டாட்டம் ஆடுகிறார் என்றால் அது மிகையில்லை.

-ஆர்.சரவணன், மயிலாடுதுறை.

பின்னடைவு!

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்கிற பொதுப்பண்புக்கு கேடு விளைவிக்கப் பார்க்கிறது பா.ஜ.க. இங்குள்ள பூர்வீக மக்களின் மனங்களில் இடம்பிடித்தாலே தாமரை மலர்ந்துவிடும். அதைவிடுத்து, வட மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை என குறுக்குவழியில் ஓட்டுகளாக மாற்ற நினைக்கிற பா.ஜ.க.வின் சுயநல அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் காவி புத்திக்கு இது மக்கள் மத்தியில் மேலும் மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும்.

-எஸ்.அசோகன், சிவகாசி.

nkn280818
இதையும் படியுங்கள்
Subscribe