பார்வை!-ப்ரியதர்ஷினி இமானுவேல்

parvai

parvai

மிழக அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் கட்டமைப்பில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக விளங்குகிறது நக்கீரன். நான் சிறுவயதாக இருக்கும்போதே என் தந்தை நக்கீரன் இதழை வீட்டுக்கு வாங்கி வந்து படிப்பார். நான் கல்லூரி புத்தகங்கள் படித்து முடித்தபின் நக்கீரனை வாசிப்பேன். நக்கீரன் புத்தகத்தின் தலைப்பில் உள்ள "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்பதை படித்து இப்பத்திரிகையின் மீது ஆர்வம் கொண்டேன். சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை

parvai

மிழக அரசியல் மற்றும் சமூக வாழ்வியல் கட்டமைப்பில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக விளங்குகிறது நக்கீரன். நான் சிறுவயதாக இருக்கும்போதே என் தந்தை நக்கீரன் இதழை வீட்டுக்கு வாங்கி வந்து படிப்பார். நான் கல்லூரி புத்தகங்கள் படித்து முடித்தபின் நக்கீரனை வாசிப்பேன். நக்கீரன் புத்தகத்தின் தலைப்பில் உள்ள "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்பதை படித்து இப்பத்திரிகையின் மீது ஆர்வம் கொண்டேன். சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு நான் கோபம் கொண்டபொழுது, என் மனக்கோபத்துக்கு மருந்தாக இருந்தது நக்கீரன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நக்கீரனை வாசித்து வருகிறேன். அதில் வரும் செய்திகள் எதையும் மறைத்து எழுதாமல், யாருக்கும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை இல்லாமல் நேர்கொண்ட பார்வையாக நக்கீரன் இருக்கிறது. இருக்கும் உண்மையை அப்படியே மக்கள் முன் வைக்கிறது. அந்த உண்மைத் தன்மைதான் என்னை நக்கீரன் வாசகி எனச் சொல்லி பெருமைப்பட வைக்கிறது. ஆபாசமின்றி மக்களைக் கவரும் வடிவமைப்பில் வருவது நக்கீரனின் சிறப்பு.

2018, ஆகஸ்ட் 15-17 இதழ்:

"அதிரடி அழகிரி, சைலன்ட் ஸ்டாலின்! கலங்குமா? தெளியுமா' என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தச் செய்தி ஒரு தலைவனுக்கு வீட்டிலும், வெளியிலும் ஏற்படும் நெருக்கடிகளை, ஆதங்கத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. ஸ்டாலின், செயல்களின் தலைவன் என்பதை கலைஞரின் இழப்பே மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளது என்பதை அதற்கடுத்த செய்தி வெளிப்படுத்தியுள்ளது.

"கரிகாலன் கட்டிய கல்லணையை திருடி மொராசியஸ் சுற்றுச்சுவர் கட்டுகிறது' என்கிற களவுபோன கல்லணைக் கற்கள் செய்தியைப் படித்தபோது துயரமாக இருந்தது. இது அழிவுக்கான ஆரம்பம் என்பதை ஏன் அதிகாரிகள் உணர மறுக்கிறார்கள்?

வாசகர் கடிதங்கள்!

கொப்பளித்த வருத்தம்!

"திண்ணைச் கக்சேரி'யில் விளையாட்டு மேம்பாட்டு அதிகாரி ரீட்டா பற்றிய செய்தித் தொடக்கம் பெருமையாக இருந்தது. எனினும் அவர், தனக்கு உகந்தவர்களைப் பதவிகளில் அமர்த்தி... அமைச்சரோடு வில்லங்கமாகியிருக்கிறார் என்கிற இறுதி வரிகளை வாசிக்கும்போதும் வருத்தம் கொப்பளிக்கவே செய்கிறது.

-இ.மதலைமேரி, கொலாலை.

உடனடி சந்தேகம்!

நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தரின் முறைகேடுகள் குறித்து ஏற்கனவே நக்கீரனில் படித்ததுதான். துணைவேந்தர் இப்போது "மூட்டா' அமைப்பினரை குறைசொல்வது நியாயமாகவே இருக்கட்டும். இருப்பினும், நேர்மையாகச் செயல்படுகிற ஒருவரிடம் சென்று இல்லீகலாகப் பேசுவார்களா என்கிற உடனடி சந்தேகமும் எழாமல் இல்லை.

-எம்.குழந்தைசாமி, அம்பாசமுத்திரம்.

nkn240818
இதையும் படியுங்கள்
Subscribe