Advertisment

பார்வை! -ந.நெவளிநாதன் MBA, B.L

parvai

book

தொடக்கத்தில் நானும் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். அதிலும் நான் சின்ன வயதில் நக்கீரன் போன்ற புலனாய்வு இதழ்களை படித்ததால் கல்லூரியில் படிக்கும்போது மேலும் ஆர்வம் அதிகமாகி 2001-2002-ல் நக்கீரன் மாணவ நிருபர் திட்டத்தில் தேர்வானேன். அதன் முதல் அறிமுக கூட்டத்தில் எத்தனை யுத்தங்கள் நடத்தி ஒரு செய்தியை எடுக்க வேண்டும் என்பதை துணிந்து செய்த ஆசிரியர் மற்றும் சக செய்தியாளர்களின் களநிலவரத்தை பகிர்

book

தொடக்கத்தில் நானும் ஒரு பத்திரிகையாளராக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். அதிலும் நான் சின்ன வயதில் நக்கீரன் போன்ற புலனாய்வு இதழ்களை படித்ததால் கல்லூரியில் படிக்கும்போது மேலும் ஆர்வம் அதிகமாகி 2001-2002-ல் நக்கீரன் மாணவ நிருபர் திட்டத்தில் தேர்வானேன். அதன் முதல் அறிமுக கூட்டத்தில் எத்தனை யுத்தங்கள் நடத்தி ஒரு செய்தியை எடுக்க வேண்டும் என்பதை துணிந்து செய்த ஆசிரியர் மற்றும் சக செய்தியாளர்களின் களநிலவரத்தை பகிர்ந்துகொண்டபோது உண்மையிலேயே த்ரிலிங்காக இருந்தது.

Advertisment

அந்தப் பயிற்சியில் கவிஞர் வைரமுத்து, நெறியாளர் ரமேஷ்பிரபா, பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன் போன்றோரின் கலந்துரையாடல்கள் என் மனதில் என்றும் நீங்காத பசுமையான நினைவுகள்.

Advertisment

நக்கீரன் நிருபராக பணிசெய்ய வாய்ப்பு கொடுத்தும், அரசியல் காரணங்களுக்காக அதை என்னால் ஏற்றுச் செயல்பட முடியவில்லை என்பது எனக்கு எப்போதும் இருக்கும் வருத்தம்.

நான் சார்ந்த இயக்கத்திற்கு அதிக எதிர் கருத்துக்களை தருவதில் முதலிடம் பிடிப்பது நக்கீரன்தான் என்பதாலும், 2001-02-ல் அதன் மாணவ நிருபர்களில் நானும் ஒருவன் என்பதாலும், நக்கீரனை விடாமல் படித்துவிடுவேன்.

2018 ஆக 11-14 இதழ்:

திருமதி அமுதா இ.ஆ.ப. அவர்களைப் பற்றிய செய்தி நல்ல அதிகாரிகளை பாராட்ட நக்கீரன் தயாராகவே இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

திருவாரூர் வேட்பாளர் யார் என ஆருடம் சொன்ன நக்கீரன், அப்படிச் செய்தால் அது தி.மு.க.வின் எதிர்காலத்திற்கு சரியாக வருமா என்பதையும் கூறியிருந்தால் தி.மு.க.வுக்கு உதவியாக இருந்திருக்கும். மேலும் ஒரு சின்னக்கிராமமான எங்கள் பகுதி சிலட்டூரில் தி.மு.க. தலைவருக்கு அனுசரிக்கப்பட்ட துக்கநிகழ்வை எடுத்துச் சொல்லியது, உள்ளபடியே எல்லோரையும் ஈர்க்கிறது.

வாசகர் கடிதங்கள்!

உருகலின் உச்சம்!

"ஒரு நூற்றாண்டின் ஒற்றைச் சூரியனைப் புதைத்துவிட்டோம்' என செம்மொழிக் கலைஞருக்கு கவிதைகளால் கல்வெட்டு செதுக்கிவிட்டனர் கவிஞர்கள் வைரமுத்துவும், யுகபாரதியும். கலைஞரின் பேரிழப்பை ஒவ்வொரு வரியிலும் உருக்கமாக வடித்துள்ளனர்.

-கலை.முத்தழகன், தஞ்சாவூர்.

நன்றிக்குரிய ஒன்று!

கலைஞர் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக கட்டப்பட்ட 42 அணைகளும் காலத்துக்கும் பேசப்படும். இனி இப்படி ஒரு சாதனையை வருங்கால அமைச்சர்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை... இயற்கை அழிவுகளிலிருந்து கட்சி பாகுபாடின்றியும் அவற்றைப் பாதுகாத்தாலே நன்றிக்குரிய ஒன்றுதான்.

-எம்.சிவா, சேலம்.

nkn200818
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe