சினிமா வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு பிடித்தமான இதழ் நக்கீரன். காரணம், நக்கீரன் வெளியீடாக அப்போது வெளிவந்துகொண்டிருந்த "ரஜினி ரசிகன்' சினிமா இதழ்தான்.
அந்த நாட்களில் அது வெளியாகும்போது அதைப் பற்றி நாங்கள் நிறைய பேசியுள்ளோம். பிறகு நக்கீரனில், வீரப்பன் பற்றிய செய்தி படத்துடன் வெளி வந்தபோதுதான் ஒரு தமிழ்ப் புலனாய்வு பத்திரிகை இதழாக அனைவரையும் கவர்ந்தது, பயங்கரமானவனாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன் யாரையும் நம்ப மாட்டான்; ஆனால் அவன் நம்பிக்கைக்கு ஒருவர் இருந்தார் என்றால் அது ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்கள்தான். அதேபோல பிணைக்கைதிகளை அவனிடமிருந்து மீட்க, இரு மாநிலஅரசுகள் நம்பியதும் நக்கீரன் கோபாலை மட்டும்தான். அதேபோல எந்தவொரு சிக்கலுமில்லாமல் அவர்களை மீட்டு அரசுகளின் நம்பிக்கையைக் காப் பாற்றியவர். சமீபத்தில் என் நண்பர் கங்கை அமரன் அவர்கள் எழுதிய பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்ஸை தொடர்ந்து படித்து வந்தேன். அதில் நானும் அமரனும் 1971-ல் இருந்து பழகிய இளமைக் காலத்தை மீண்டும் கொண்டுவந்து காட்டியது. அதுமட்டுமல்ல கமலுடன் 1969-ல் இருந்துவரும் நட்பையும் நான், இளையராஜா, பாரதிராஜா, அமரன், ரஜினி போன்ற அப்போ தைய எங்கள் நட்பு வட் டாரத்தையும் வெளிப் படுத்தி, எங்களுக்குள் நடந்த விஷயத்தையும் நினைவுபடுத்திய நக்கீரனுக்கு எங்கள் நன்றி.
2018 ஆக. 01-03 இதழ் :
இந்தியாவின் மூத்த அர சியல் தலைவரான கலைஞர் பற்றி "டைம் டூ டைம் ரிப்போர்ட்' கண்முன்னே நிறுத்தியது. அடுத்தது எங்க பகுதியான "கர்ஜனை' ஒரு கலைஞர் மதிக்கும் தொடர். அத்துடன் ஷகீலா சரித்திரமும் அவர் தன் சொந்த கதையை படமெடுக்க தயங்குவதும் வெளிப்படையாக உள்ளது. புது சிந்தனை மாவலி பதில்கள். அத்துடன் "மீண்டு எழுந்து வா தலைவா' என்ற உடன்பிறப்புகளின் முழக்கத்தாலேயே கலைஞர் மீண்டுள்ளார்.
___________________
வாசகர் கடிதங்கள்!
"ஸ்மார்ட்' ஊழல்!
பள்ளிப் பிள்ளைகளின் "ஸ்மார்ட்' வகுப்புகளுக்கான டெண்டரிலும் கன்னக்கோல் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களா? அரசு தயவில் எல்காட் நிறுவனம் இயங்கிவரும்போது எல் அண்ட் டி உள்ளிட்ட குரூப்புகளுக்கு ஏன் கொள்முதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வியில் பல சீர்திருத்தங்கள் செய்துவரும் அமைச்சர் செங்கோட்டையன் நிச்சயம் உறுதியான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
-ஆர்.கணபதி, மதுரை.
குள நாசம்!
குடிமராமத்து திட்டத்தில் குதறப்பட்ட குளங்களில் அதிகாரிகளின் பின்வாசல் போக்கிரித்தனங்கள் நிழலாடுகின்றன. விதிகளை மீறி மண் அள்ளி, கோடிகளில் பணத்தை தூர்வாருகிற மணல் கொள்ளையர் களைத் தடுக்காதவரை டெல்டா மக்களின் வாழ்வாதாரம் தண்ணிபட்ட பாடுதான்.
-எஸ்.கங்காதரன், கூடலூர்.