Advertisment

பார்வை!-ஜி.ஜெவீரன்

parvai

parvai

Advertisment

ட்சியாளர்களின், காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் துணிந்து நின்றதால்தான் இன்று நக்கீரனால் உயர்ந்து நிற்கமுடிகிறது. எத்தனை இன்னல்கள் வந்தபோதும் அதை உடைத்தெறிந்து வாசகர்களை ஏமாற்றாமல், இதழ்களை நிறுத்தாமல் வெளிக்கொண்டு வந்த துணிச்சல்தான் நக்கீரனை இந்த உயரத்திற்கு கொண்டுவந்து இணையில்லா இதழாக உயர்த்தி வைத்திருக்கிறது. இரண்டு மாநில அரசுகள் வீரப்பனை தேடிக்கொண்டிருந்தபோது காட்டுக்குள் போய் வீரப்பனை பார்த்துவிட்டு "இவர்தா

parvai

Advertisment

ட்சியாளர்களின், காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் துணிந்து நின்றதால்தான் இன்று நக்கீரனால் உயர்ந்து நிற்கமுடிகிறது. எத்தனை இன்னல்கள் வந்தபோதும் அதை உடைத்தெறிந்து வாசகர்களை ஏமாற்றாமல், இதழ்களை நிறுத்தாமல் வெளிக்கொண்டு வந்த துணிச்சல்தான் நக்கீரனை இந்த உயரத்திற்கு கொண்டுவந்து இணையில்லா இதழாக உயர்த்தி வைத்திருக்கிறது. இரண்டு மாநில அரசுகள் வீரப்பனை தேடிக்கொண்டிருந்தபோது காட்டுக்குள் போய் வீரப்பனை பார்த்துவிட்டு "இவர்தான் வீரப்பன்' என்று படத்தை வெளியிட்டுக் காட்டியபோதுதான் வாசகர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் வீரப்பனின் உருவத்தைக் காண முடிந்தது. அப்போது வாசகனாக நான் மகிழ்ந்தேன். இப்போதும் அதன் வாசகனாகத் தொடர்வதில் பெருமைகொள்கிறேன்.

2018, ஏப்ரல் 8-10 இதழ்:

அட்டைப்படத்திலேயே சுட்டிக்காட்டிய "காவிரி வஞ்சகம் தலைவிரித்தாடும் கர்நாடகம்' என்ற கட்டுரை உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்துள்ளது. கவர்னர் பெயரால் கல்லூரி மாணவிகளுக்கு வலை ஆடியோ ஆதாரம் என்ற செய்தி ஏழை மாணவிகளை எப்படி எல்லாம் ஏமாற்றி இழுத்துச் செல்கிறார்கள்? அந்த நிர்மலா மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவது ஒரு தந்தையாக என் மனதை வலிக்கச் செய்கிறது.

ஏ.டி.ஜி.பி. மகளின் அட்டகாசம் உயிர்ப்பலி வாங்கும்வரை சென்றிருப்பது புலனாய்வுக்கு சிறப்பிடம் கொடுத்துள்ளது. அதிகாரத்திற்கு ஆசைப்படாத முன்னாள் அமைச்சர் மாதவன் பற்றிய கேள்வி- பதில் அனைவரும் படிக்க வேண்டியது. "காவேரி பொங்கி வராததால் தமிழக மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள்' என்ற செய்தி விவசாயி என்கிற உணர்வைத் தூண்டிவிடுகிறது. ஸ்டெர்லைட் பாதிப்புகள் பற்றிய விரிவான கட்டுரை விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

வாசகர் கடிதங்கள்!

மலைத் தவறுகள்!

Advertisment

"நின்று தின்றால் குன்றும் குறையும்' என்பார்கள். இதை மெய்ப்பிக்க பெரம்பலூர் மாவட்ட மலைகளை மொட்டை அடிக்கிறார்கள் கல்நெஞ்சுக்கார குவாரி அதிபர்கள். அரசாங்கம் இத்தகைய மலைத் தவறுகளை தடுக்காது போனால் "கிழக்கில் பெருமாள் மலை இருந்தது, மேற்கில் பிரம்மரிஷி மலை இருந்தது' என்று எதிர்கால சந்ததிகளுக்குப் பாடம் நடத்தவேண்டிய சூழல் ஏற்படும்.

-ஆ.கர்ணன், கும்பகோணம்.

தெளிவான குளறுபடிகள்!

கூட்டுறவு தேர்தலை நடத்தச் சொன்னால் கூட்டுறவு கலகத்தை மூட்டிவிட்டிருக்கிறது அ.தி.மு.க. குரூப். இதில் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் வேட்பாளர் பட்டியலை கிழித்துவிட்டு பிறகு திருத்தப் பட்டியலை ஒட்டிவிடுவது என முன்கூட்டியே ஆலோசித்திருப்பார்களோ? அதுதான் உண்மையெனில், இது தெரிந்தே நடந்த தெளிவான குளறுபடிகள் என்று எடுத்துக்கொள்ளலாம்தானே!

-வி.பி.கனகராஜ், மயிலாடுதுறை.

Parvai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe