Advertisment

பார்வை! -கே.சி.பிரபாத்

parvai

parvai

Advertisment

ரு சினிமா தயாரிப்பாளராக இருந்து சொல்கிறேன். என்னைப் பெரிதும் கவர்ந்தது நக்கீரன்கோபால் அவர்களின் மீசை முகம்தான். சங்ககாலப் புலவர் நக்கீரரை நாம் பார்த்ததில்லை. அவருடைய உண்மையான முகமும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், நக்கீரன் என்ற பெயரை யார் உச்சரித்தாலும், நக்கீரன்கோபால் அவர்களின் முகம் நம்மையும் அறியாமல், மனத்திரையில் பளிச்சென்று விரியும்.

பத்திரிகையின் பெயரோடு பொருந்திப்போகும் முகம் என்றால், எனக

parvai

Advertisment

ரு சினிமா தயாரிப்பாளராக இருந்து சொல்கிறேன். என்னைப் பெரிதும் கவர்ந்தது நக்கீரன்கோபால் அவர்களின் மீசை முகம்தான். சங்ககாலப் புலவர் நக்கீரரை நாம் பார்த்ததில்லை. அவருடைய உண்மையான முகமும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், நக்கீரன் என்ற பெயரை யார் உச்சரித்தாலும், நக்கீரன்கோபால் அவர்களின் முகம் நம்மையும் அறியாமல், மனத்திரையில் பளிச்சென்று விரியும்.

பத்திரிகையின் பெயரோடு பொருந்திப்போகும் முகம் என்றால், எனக்குத் தெரிந்தவரையில் அண்ணன் முகம் மட்டும்தான். எங்களின் விருதுநகர் மாவட்டம் -அருப்புக்கோட்டையிலிருந்து சென்னை சென்று, உலகத் தமிழர்களெல்லாம் வியந்து படிக்கின்ற, நம்பர்-1 புலனாய்வு இதழான நக்கீரனை, ஆசிரியராக இருந்து வெளியிட்டு வருகிறார் என்றால், உள்ளபடியே என்னைப் போன்றவர்களுக்குப் பெருமைதான்.

2018, ஜூலை 25-27 இதழ்:

அரசியல் கட்டுரைகளை அசத்தலாகத் தருவதில் நக்கீரனின் பாணியே தனி. காவு வாங்கும் கட்டடங்கள் ஆகட்டும், உண்மையை சொல்லத் தயங்கும் பெற்றோர் ஆகட்டும், இதுபோன்ற சமூகக் கட்டுரைகளிலும் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறது நக்கீரன். சுப்பிரமணியசாமியை மத்திய உளவுத்துறை கண்காணிக்கிறதா? ராங்கால்-சங்கர்லால் துப்பறிந்து சொல்லும்போதுதான் இதையெல்லாம் அறிந்துகொள்ள முடிகிறது.

Advertisment

சிலை கடத்தலும் அறநிலையத்துறை ஊழலும் பதற வைக்கிறது. எங்கள் உலகநாயகன் கமலை கலாய்க்கலாமா மாவலி? "பிரபலங்களின் அழைப்புக்கு உடன்பட்டேன்; மூன்று மாதத்துக்கு ஒருமுறை மெடிக்கல் செக்-அப் செய்துகொள்வேன்'’என்கிறார் ஸ்ரீரெட்டி. இங்கே கிராமங்களில்... "வாயைக் கொடுத்து...'’என்று கொச்சையாக சொலவடை ஒன்றைச் சொல்வார்கள். அது இவருக்குப் பொருந்தும்.

____________________________

வாசகர் கடிதங்கள்!

பார்ட்-டைம் ஜாப்!

கடவுள் தொழிலை செய்யாமல் அயல்நாடுகளுக்கு கடவுச் சீட்டு வாங்கித் தருவதாகச் சொல்லி பார்ட்-டைம் ஜாப் பார்த்த அர்ச்சகர் ராம்ஜி, இப்போது புழல் சிறையில். நக்கீரன் அவ்வப்போது இதுபோன்ற விழிப்புணர்வுச் செய்திகளை வெளியிட்டாலும்கூட பண மோசடிகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

-து.குபேரன், ரிஷிவந்தியம்.

ராத்திரி நேரத்து...

"மிட்நைட் மசாலா'வில் கலகலப்பும் கிளுகிளுப்பும் கரைபுரள்கின்றன. எனினும் ஒவ்வொரு ரவுண்ட்-அப்பிலும் மது, மாது, கஞ்சா, திருநங்கைகள் போன்ற மசாலா பாத்திரங்களே உருள்கின்றன. இவற்றைக் கடந்து அரசியல்வாதிகளின் ராத்திரி ரகசியங்கள் மாதிரியான தப்பாட்டங்கள் அரங்கேறினால் வாசிப்பவர்களுக்கு பகலும் மிட்நைட்தான்!

-எம்.செங்கோடன், கோடாங்கிப்பட்டி.

nkn03-08-2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe