parvai

நான் பொதுவாழ்விற்கு வந்ததிலிருந்து நக்கீரன் இதழ்களை தவறாமல் படித்து வருகிறேன். நடுநிலையோடு சமூக அவலங்களை, அரசியல் பிரச்சினைகளை, மக்களுக்கான போராட்டங்களை, அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி செய்யும் தவறுகள், ஊழல்களை படம் பிடித்துக் காட்டுவதில் தனித்தன்மையோடு விளங்குகிறது. சந்தனக்காட்டு வீரப்பனை சந்தன கடத்தல் மன்னன் என்றும், சமூக விரோதி எனவும் ஊடகங்களும், அரசாங்கமும், காவல்துறையும் பிம்பத்தை ஏற்படுத்தி வந்த காலகட்டத்தில் வீரப்பனின் இன்னொரு முகத்தை, அப்பகுதி மக்களின் பாதுகாவலராக இருந்து, காவிரியை வஞ்சித்த கர்நாடகாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி காவிரி உரிமைகளை மீட்ட அரணாகவும் திகழ்ந்ததை நக்கீரன் இதழ்தான் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதுபோல ஆசிரியர் திரு.நக்கீரன்கோபால் அவர்களை 21 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். எவ்வளவு அடக்குமுறைகள், தாக்குதல்களை எதிர்கொண்டபோதும் உண்மையாகவும், நேர்மையாகவும், துணிச்சலாகவும் சவால்களை எதிர்கொண்டு வருவதை பார்த்து வருகிறேன்.

ஜூலை 21-24 இதழ்:

"போதை ஏற்றி பாலியல் கொடூரம்' கட்டுரையைப் படித்தபோது இளம் பெண் பிள்ளைகளுக்கு போதை கொடுத்து சீரழிக்கும் மனிதர்கள் உண்மையிலேயே மனிதர்கள்தானா..? இவர்கள் பெண்களுடன் பிறந்தவர்கள்தானா...? எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதை படித்ததும் மனம் கனக்கிறது. பெண் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், சமூகத்தில் எப்படி பழகச் செய்ய வேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

Advertisment

'செல்லா நோட்டு' கட்டுரையில் மத்தியில் ஆளும் அரசுகள் தமக்கு ஆதரவாக இருக்கும் மாநிலங்களில் எவ்வளவு ஊழல்கள் நடந்தாலும் கண்டும் காணாமல் இருந்துவிட்டு, தமக்கு ஒத்துவராத போது ரெய்டு பயம் காட்டி மிரட்டுவதை அம்பலப்படுத்துகிறது. ஜெயலலிதா இருந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் நடந்த ரெய்டுகள் என்ன ஆனது

_________________

வாசகர் கடிதங்கள்!

Advertisment

வேட்டையன் நக்கீரன்!

பொதுமக்கள் காலாவதியாகிப்போன ஒருசில 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வழியில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் தரகர் ஸ்ரீனிவாசனோ, குடோன் பிடித்து செல்லாத நோட்டுகள் மூலம் ஆடுகிற வில்லங்க ஆட்டம் அடடா தூள் பரத்துகிறது. இதை யார் தட்டிக் கேட்பது? வழக்கம்போல இதிலுள்ள அரசுகளின் கைவரிசையையும், நுணுக்கமாகச் சொல்லி, சமூகவிரோதச் சக்திகளை சதுரங்க வேட்டையாடி வருகிறது நக்கீரன்.

-த.பூமாலை, இருங்காட்டுக்கோட்டை.

உயிரோட்டம்!

டூரிங் டாக்கீஸில் "கடைக்குட்டி சிங்கம்' விமர்சனம் படம் பார்த்ததுபோல் உயிரோட்டமாக இருந்தது. உழவுக்கும் உறவுக்கும் இடையே வேரோடிக் கிடக்கும் இந்த பந்தத்தை யதார்த்த வசனங்களால் பந்தல் போட்டிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

-வெ.குணசேகரன், கோயம்புத்தூர்.