Advertisment

பார்வை! -வழக்கறிஞர் நைனா முகமது

parvai

parvai

க்கீரனும் வழக்கறிஞர்களும் ஒரே பாதையில் பயணிக்கும் இருப்புப்பாதை போன்றவர்கள். குடிமக்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் கோர்ட்டில் வாதாடுகிறோம்... மக்களுக்கு உண்மையை சொல்ல நக்கீரன் வாசகர்களிடம் வாதாடுகிறது.

Advertisment

தமிழில் துடிப்பான, துணிச்சலான, அரசியல் புலனாய்வுச் செய்தியை பதிவிடுவதில் நக்கீரன் என்றுமே தனிமுத்திரையைப் பதித்துள்ளது. அன்று சந்திரலேகா மீது நடந்த தாக்குதல் முதல் இன்று தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடுவர

parvai

க்கீரனும் வழக்கறிஞர்களும் ஒரே பாதையில் பயணிக்கும் இருப்புப்பாதை போன்றவர்கள். குடிமக்களுக்கு நீதி கிடைக்க நாங்கள் கோர்ட்டில் வாதாடுகிறோம்... மக்களுக்கு உண்மையை சொல்ல நக்கீரன் வாசகர்களிடம் வாதாடுகிறது.

Advertisment

தமிழில் துடிப்பான, துணிச்சலான, அரசியல் புலனாய்வுச் செய்தியை பதிவிடுவதில் நக்கீரன் என்றுமே தனிமுத்திரையைப் பதித்துள்ளது. அன்று சந்திரலேகா மீது நடந்த தாக்குதல் முதல் இன்று தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடுவரை நக்கீரனின் துணிச்சலான பதிவுகள் களைப்பில்லாமல் தொடர்கின்றன. இதற்கு அண்ணன் நக்கீரன்கோபால் அவர்களின் தைரியமே முதலீடு. அதற்காக அவர் நடத்திய சட்டப் போராட்டம் சொல்லித் தீராது. பல வழக்குகளை நக்கீரன் கையாண்டதும் அதில் வெற்றியைக் கண்டதும் இதழியல் சட்ட பாடத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பாமர வாசகன், நக்கீரனைப் படித்தே பல வழக்குகளை தெரிந்துகொள்ளும் அளவில் எளியநடையில் வழங்குவதே இதன் சிறப்பம்சம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு. கடைசிவரை பின்தொடர்ந்து சட்டப் போராட்டத்தை எளிய நடையில் மக்களுக்குப் புரியும்படி வழங்கிய சிறப்பு நக்கீரனையே சாரும்.

Advertisment

2018 ஜூலை 18-20 இதழ்:

"ரெய்டு! மொத்தமாக சிக்கும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.' செய்தி மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டியதைக் காட்டுகிறது. அதேபோல முன்பே இந்தத் தகவல் பற்றிய பதிவும் நக்கீரனின் புலனாய்வு அபாரத்தைக் காட்டுகிறது.

"ஸ்ரீரெட்டியின் டார்கெட்' கொஞ்சம் கிளாமர். மீண்டும் திண்ணைக் கச்சேரி கதைகள், நடிகர் ராதாரவியின் "கர்ஜனை' கம்பீரத் தொடர், "மிட்நைட் மசாலா'வில் கொஞ்சம் மசாலா தேவை. ஜெயலலிதா இருந்தபோதே எதிர்த்து நின்று செய்தியை பதிவிட்ட ஒரே துணிச்சல் பத்திரிகை நக்கீரன். அந்தம்மா இறந்தபின் அதில் உள்ள மர்மத்தையும் அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு நடந்த துரோகத்தையும் வெளியே கொண்டுவரும் நக்கீரனின் முயற்சிக்கு சல்யூட்.

_______________________

வாசகர் கடிதங்கள்!

எச்சரிக்கை பாடம்!

அ.தி.மு.க. எம்.பி.யும் மக்களவை துணை சபாவுமான தம்பிதுரையின் "கலைமகள்' கல்லூரி மாணவி லோகேஸ்வரியின் படுகொலை... அய்யோ பாவம்! துயரத்திற்குக் காரணமான அரைவேக்காடு என்.டி.எம்.ஏ. ட்ரெயினர் ஆறுமுகம் குறித்த நக்கீரன் செய்தி... மற்ற கல்லூரிகளுக்கு ஒரு சிறந்த முன்னெச்சரிக்கைப் பாடம்.

-ஆர்.புவனா, கோலார் தங்கவயல்.

தவணைமுறை அரசியல்!

"எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' தவணை முறையிலாவது இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு முத்தாய்ப்பான சாட்சிதான் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம். கலகலக்கிறது திண்ணைக் கச்சேரி.

-வ.உ.சுந்தராம்பாள், ஆவுடையார்கோவில்.

nkn27-07-2018
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe