பார்வை! -க.சந்திரசேகர் எம்.ஏ., பி.எட்.

parvai

parvai

"ந'க்கீரன் இதழின் கால் நூற்றாண்டு கால வாசகன் என்று சொல்வதிலும், சமூகத்தின்பால் அக்கறையும், பொறுப்பும் கலந்த இதழை வாசிப்பதிலும் எப்போ தும் பெருமிதம் அடைகிறேன். ஆசிரியர் சங்க பொறுப்பாளராக எங்களின் அடிப்படை உரிமை களைக் கேட்டு கடந்த ஆண்டு, ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்டம் நடத்தினோம். பொய் வழக்கில் கைது செய்யப் பட்டு ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, நான் ஆசிரியர்களுக்காக சிறை சென்றதற்கு பெருமிதம் அடை

parvai

"ந'க்கீரன் இதழின் கால் நூற்றாண்டு கால வாசகன் என்று சொல்வதிலும், சமூகத்தின்பால் அக்கறையும், பொறுப்பும் கலந்த இதழை வாசிப்பதிலும் எப்போ தும் பெருமிதம் அடைகிறேன். ஆசிரியர் சங்க பொறுப்பாளராக எங்களின் அடிப்படை உரிமை களைக் கேட்டு கடந்த ஆண்டு, ஜாக்டோ ஜியோ சார்பில் போராட்டம் நடத்தினோம். பொய் வழக்கில் கைது செய்யப் பட்டு ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, நான் ஆசிரியர்களுக்காக சிறை சென்றதற்கு பெருமிதம் அடைந் திருந்தேன். ஆனால் நக்கீரன் ஆசிரியர் அய்யா அவர்கள், சமூகத்தில் குரலற்றவர்களின் குரலாக ஒலித்த தாலும், ஆட்சி யாளர்களின் ஊழல்களை அம்பலப்படுத்திய தாலும் அவர் மீது புனையப்பட்ட 600க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை மக்களுக்காக சுமந்து வருகிறார் என்று கேள்விப்பட்டபோது நாங்கள் செய்ததெல்லாம் அணுவை விட மிகச்சிறியது என்பதுதான் உண்மை.

2020, மார்ச் 21-24 இதழ்:

"எப்படி தப்பிப்பது? எப்போது மருந்து கிடைக்கும்?' என்ற முகப்புக் கட்டுரையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு கியூபா நாட்டிடம் இண்டர் பெர்ரோன் ஆல்பா 2பி என்கிற மருந்து இருக்கிறது என்ற தகவலைச் சொல்லியிருப்பது இப்போது மக்களிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற அமெரிக்காவின் அரசியல் மிரட்டலையும் தொட்டுக்காட்டியிருப்பது நக்கீரனின் பஞ்ச்.

"தமிழன்னைக்கு ஆபத்து' என்ற கட்டுரை தமிழ் மீது நடத்தப்படும் தாக்குதலை எடுத்துரைக்கிறது.

நேரடி அரசியல்தான் தீர்வு என்கிற திவ்யா சத்யராஜ் உடனான உரையாடலில், ஐந்து வயதுக்குட்பட்ட 39.4 சதவீத குழந்தைகளிடம் போதிய வளர்ச்சி இல்லை என்பது போன்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அல்லது முழுவதுமாக கெட்-அவுட்டானாலும் மோடி ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் பொருளாதாரம் சீரடைவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆனாலும் ஆச்சர்யமில்லை.

ரேஷன் கடைகள் மூலம் மாஸ்க் விநியோகம் செய்யலாம் என்று மருத்துவர் சரவணன் எம்எல்ஏ கூறுவது சரியான யோசனை.

_________________

வாசகர் கடிதங்கள்!

சாதியே துணை!

காதலை சாதி பிரித்திருக்கிறது. செல்வனின் காதல் கலந்த இளமதி, திருமணத்துக்குப் பிறகு சாதி பக்கம் சாய்ந்தது பல்லாயிரம் ஆண்டு கால ஆதிக்கத்தின் அடையாளம்.

-சு.கண்மணிராஜன், திருச்சி.

சிந்திக்க!

வலைவீச்சுல கொரோனா ஆதிக்கம் குறித்த கமெண்டுகள், அரசியல் நிலையை முன்னிலைப்படுத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

-தா.வேலவன், வேலூர்.

nkn310320
இதையும் படியுங்கள்
Subscribe