பார்வை!-பெரியதம்பி

ff

parvai

த்திரிகை பயணத்தில் ஆசிரியர் கோபால் அண்ணன் அவர்கள் என்னை யும் நினைவுகூர்ந்து அவ்வப்போது தொலைபேசியில் அழைத்துப் பேசுவார் கள். முதன்முதலில் எப்படி பேசினார் களோ அதே அன்பு மாறாமல் இப்பொழுதுவரை எப்படி மீசை அண்ணாச்சியால் மட்டும் பேச முடிகிறது என்பது எனக்குள் விடை காண முடியாத மில்லியன் டாலர் கேள்வி.…

"நக்கீரன்' இதழ் படிக்க ஆரம்பிக்கும் போதும் சரி முடிக்கும்போதும் சரி இந்த மாறாத சமுதாயத்

parvai

த்திரிகை பயணத்தில் ஆசிரியர் கோபால் அண்ணன் அவர்கள் என்னை யும் நினைவுகூர்ந்து அவ்வப்போது தொலைபேசியில் அழைத்துப் பேசுவார் கள். முதன்முதலில் எப்படி பேசினார் களோ அதே அன்பு மாறாமல் இப்பொழுதுவரை எப்படி மீசை அண்ணாச்சியால் மட்டும் பேச முடிகிறது என்பது எனக்குள் விடை காண முடியாத மில்லியன் டாலர் கேள்வி.…

"நக்கீரன்' இதழ் படிக்க ஆரம்பிக்கும் போதும் சரி முடிக்கும்போதும் சரி இந்த மாறாத சமுதாயத்தில் இன்னும் எத்தனை நாளைக்கு நாமெல்லாம் எல்லாவற்றிற்கும் போராட வேண்டியிருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

2020, மார்ச் 14-17 இதழ்:

ரஜினி என்ற மனிதரை மாமனிதராக்கி இன்னமும் ஒரு ரசிகர் கூட்டம் கொண்டாடி அரசியலில் ஏதாவது மாற்றம் செய்வார் அல்லது சொல்வார் என்று தவம் கிடக்கிறது. "பாட்சா' படத்தில் ஒரு வசனம் வரும்... “""உண்மையைச் சொன்னேன்'' என்று. அதேபோல் விரைவில் செய்வாரா என தெரியவில்லை.… தமிழக பா.ஜ.க.வுக்கு ஒரு தலைவரை அறிவித்திருக்கிறார்கள். இவரின் செயல்திறன் எப்படி என போக போகத்தான் தெரியும். "அடுத்த கட்டம்' பழ. கருப்பையா சிந்திக்க வைக்கிறார். காங் கிரஸ் கோஷ்டிப் பூசல் எப்பொழுது தீரும் என்பது அவர் களுக்கே வெளிச்சம். "பெண்களைப் போற் றுங்கள்' என ஒரு பக்கம் பிரச்சாரம்... அதே பெண்களால் பெண் குழந்தைகள் கள்ளிப்பால் மூலம் அழிக்கப்படும் அவலம் ஒரு பக்கம்... என நெஞ்சு பதறு கிறது. நக்கீரனின் ஒவ்வொரு பக்கமும் இன்றைய நாட்டு நடப்பையும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண் டும் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டி, "எங்கள் துணிச்சல் என்றும் மாறாது' என மார்தட்டி மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது நமது "நக்கீரன்'.

தொடரட்டும் நக்கீரனின் வெற்றிப்பயணம்.

_______________

வாசகர் கடிதங்கள்!

மூடுவிழா!

மத்திய அரசும் மாநில அரசும் பொது நிறுவனங்களை போட்டி போட்டுக்கொண்டு தனியாருக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், அரியலூர் சிமெண்ட் ஆலை மூடுவிழாவுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் சபிதா ஐ.ஏ.எஸ்.

-தி.மதலைமேரி, கன்னியாகுமரி.

நடவடிக்கை!

தமிழக அரசு கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்துவ தோடு, சமூக விரோதிகளின் கடத்தல் பொருட்களுக்கு துணைபோகும் மேல்மட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஆர்.முரளி, தூத்துக்குடி.

nkn210320
இதையும் படியுங்கள்
Subscribe