நக்கீரன் வார இதழாக வர ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை விடாமல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்னைப் போன்ற வாசகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் அரசியல் பத்திரிகைகளில் நக்கீரனுக்கு முதலிடம் என்றால் அது மிகையாகாது.
நக்கீரனில் வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் வெளியிடும் செய்திகள் அத்தனையும் உண்மை, உண்மை, உண்மை. மேலும் செய்திகளை முந்தித் தருவதிலும் "நக்கீரன்' தான் முதன்மை இடத்தில் இருக்கிறது. யார் தவறு செய்தாலும் தட்டிக்கேட்பதில் சமாதானமற்ற செயல்பாடுதான் நக்கீரனுக்கான தனிச்சிறப்பு.
2020, மார்ச் 11-13 இதழ்:
இன்றைக்கு வைரலாகப் பரவிவரும் கொரோனா வைரஸின் தன்மையையும் அதற்கு எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதையும் "எங்கும் எதிலும் கொரோனா! அலர்ட் தமிழகம்' எனும் செய்தி அழகாக எடுத்துரைக்கின்றது.
மேலும் "எஸ் பேங்க் நோ! அடுத்த வங்கி...? திட்டமிட்டு திவாலாக்கும் மோடி அரசு' என்கிற செய்தி அனைவருக்கும் எச்சரிக்கையூட்டுகிறது. அதேபோல ஒவ் வொரு பக்கத்திலும் ஒருவரிச் செய்திகளும், சிந்தனைகளும் அசத்துகின்றன. அதில் விடைத்தாள் திருத்த ஆசிரியர்கள் ஊதியத் தில் பிடித்த வருமானவரியை செலுத்தாதது ஏன்? அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் என்கிற செய்தி அருமை. இறுதிப் பக்கத்தில் வருகின்ற "வலைவீச்சு' அனைத்துச் செய்திகளையும் ஒரு கண் ணோட்டத்தில் கொண்டு வந்து நகைச்சுவையோடு நகர்த்திச் செல்வது மிக அருமையாக உள்ளது.
இதைப்போன்று இன்னும் சொல்லப்போனால் இழ்ங்ஹந்ண்ய்ஞ் சங்ஜ்ள் ஆக மட்டும் பார்க்காமல் செய்தியின் உண் மைத்தன்மையின் அவசியத்தை உணர்த்தும் வகையில், நக்கீரன் வாரம் இருமுறை இதழ் செயல்படுவதால் என்னைப் போன்ற வாசகர்களை தொடர்ந்து தக்கவைப்பதில் நக்கீரனுக்கு நிகர் "நக்கீரன்' மட்டுமே. நெற்றிக்கண் கொண்ட பார்வையில் தீமையை சுட்டெரிக்கும் "நக்கீரன்' பயணம் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள்.
________________
வாசகர் கடிதங்கள்!
பெம்மானின் பேரிழப்பு!
தன்மானப் பெரியோனாய் வாழ்ந்த பேராசிரியரின் மரணம், திராவிட இனத்தின் பேரிழப்பு. அவரது அரசியல் அர்ப் பணிப்பை வாசிக்கும்போது, தி.மு.கழகத்திற்கு இப்படி ஒரு பெம்மான் இனி எப்போது வாய்ப்பார் எனும் உங்களின் ஏக்கம் எங்களையும் தொற்றிக் கொண்டது.
-எம்.ஆர்.ராமய்யா, விழுப்புரம்.
அல்வா!
வாசனின் ராஜ்யசபா சீட்டுக்கு சிபாரிசு செய்ததோ தேசிய லெவல். பிரேமலதாவுக்கு சீட் தருவதாகச் சொன்னவர் களோ அந்த லெவலுக்குக் கீழே கைகட்டி நிற்கும் தலையாட்டிப் பொம்மைகள். அதான் பதம் பார்த்து கொடுத்துவிட்டார்கள் அல்வாவை.
-கள.தேவேந்திரன், திருப்புவனம்.