Advertisment

பார்வை! -முனைவர் தி.நெடுஞ்செழியன்

parvai

parvai

Advertisment

க்கீரன் இதழ் தமிழர்களின் அரசியல் அறிவை வளர்த்தெடுத்த பெருமைக்குரியது. வீரப்பன் பிரச்சினையில் உலகத்தின் கவனத்தைப் பெற்ற ஒரே தமிழ் இதழ் என்னும் பெருமையை நக்கீரன் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. உலகின் முதல் தரமான ஊடகம் என்று அழைக்கப்படும் பி.பி.சி.யில் செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் வரும். இஇஈயின் செய்தியறிக்கையில் தமிழில் ஒலித்த முதல்குரல் நக்கீரன் ஆசிரியர் அவர்களின் குரல்தான். அவரின் தமிழ் உரைக்கு இஇஈ ஆங்கிலத்தில் சப்-டைட்ட

parvai

Advertisment

க்கீரன் இதழ் தமிழர்களின் அரசியல் அறிவை வளர்த்தெடுத்த பெருமைக்குரியது. வீரப்பன் பிரச்சினையில் உலகத்தின் கவனத்தைப் பெற்ற ஒரே தமிழ் இதழ் என்னும் பெருமையை நக்கீரன் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. உலகின் முதல் தரமான ஊடகம் என்று அழைக்கப்படும் பி.பி.சி.யில் செய்திகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் வரும். இஇஈயின் செய்தியறிக்கையில் தமிழில் ஒலித்த முதல்குரல் நக்கீரன் ஆசிரியர் அவர்களின் குரல்தான். அவரின் தமிழ் உரைக்கு இஇஈ ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டது என்றால், நக்கீரன் பெருமையைச் சொல்லி மாளாது. நக்கீரனின் வளர்ச்சியில் பெருமைகள் மட்டுமல்ல. காலத்தால் அழியாத காயங்களும் உண்டு. காயங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் இதழியல் உலகில் பீடுநடை போடும் கெத்து நக்கீரனுக்கு மட்டுமே உண்டு.

2018, ஜூன் 30 - ஜூலை 3 இதழ் :

ராங்-கால் என்னும் பகுதியில் பல இடங்களில் நடைபெறும் கமுக்கச் செய்திகளை அம்பலப்படுத்துவது சிறப்பு. குறிப்பாக நிர்மலாதேவியின் குரல் சோதனை எல்லா இதழ்களிலும் செய்தியாகத்தான் வந்துள்ளது. நக்கீரன் மட்டுமே குரல் சோதனையின்போது நடந்தவற்றை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

"கவர்னருக்கு என்ன அதிகாரம்' என்ற வாதத்தில் நீதியரசர் வள்ளிநாயகம், நீதியரசர் சந்துரு இருவரும் கருத்துகளைத் தெரிவித்திருந்தாலும் வாதங்களைத் தொடங்கு முன்னர் நக்கீரன்,‘ "ஜெ. மருத்துவமனையில் அட்மிட்டானதிலிருந்தே தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சிதான் நடக்கிறது என்பது பொதுமக்களின் மனநிலை'’என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன்மூலம் மக்களுடைய மனஉணர்வுகளின் வழியாகத்தான் நக்கீரன் தனக்கான செய்திக் களத்தை அமைத்துக்கொள்கிறது என்பது புலனாகிறது. நெய்வேலி அனல்மின் நிலையம் அமைய நிலங்களைக் கொடுத்த விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்காததால் ரணத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று 50 ஆண்டுகால வரலாற்றை நக்கீரன் பதிவு செய்திருப்பதைச் சேலம், திருவண்ணாமலை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

______________

வாசகர் கடிதங்கள்!

பகுத்தறிவின் எதிரொலி!

Advertisment

மாவலி பதில்கள் -நிகழ்காலத்துக்கேற்ற கேள்விகளால் அறிவூட்டுகிறது. எஸ்.வீ.சேகர்-மன்சூர்அலிகான் பதிலில் "நூலிழை' என்கிற கருத்தோட்டம் சுவாரசிய சுவை. மேலும், கண்ணனுக்கும் நரகாசுரனுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கேட்டு, ஆன்மிக அரசியலிலும் பகுத்தறிவை எதிரொலிக்கவிட்டுப் புகுந்து விளையாடுகிறார் மாவலி.

-சி.மருதமுத்து, திருமயம்.

மகளிர் அணியில் ஆண்கள்!

தினகரனின் அ.ம.மு.க. மகளிர் அணிக்கு எதிர்காலத்தில் ஆண் நண்பர்களும் "ரன்'னாவாங்க! ஏன்? கேரள சரிதா நாயர் கட்சிக்குள்ள வலதுகால் வச்சு வர்றாகனு நக்கீரன்தானே சொல்லுச்சு.

-எம்.சி.ஜெயலட்சுமி, உடன்குடி.

Parvai nkn10.07.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe