pp

ரு செய்தி வருகிறது என்றால்... அதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்களா என்பது தான் நக்கீரனின் முதல் கேள்வியாக இருக்கும். அப்படியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தால் அது யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும், உடனே புலனாய்வு அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விடும் நக்கீரனுக்கு.

அதிகாரிகளும், ஆளும் வர்க்கமும், மக்களைச் சுரண்டு வோரும், பணத்திமிரால் அடித் தட்டு மக்களையும் நாட்டின் செல்வங்களையும் சுரண்டு வோருமே நக்கீரனை கண்டிக்கிறார்கள். அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ஆசிரியரின் மீது அவதூறுகளை கிளப்புகிறார்கள். இந்த ஒற்றைப் புள்ளியிலிருந்து நாம் பார்த் தாலே நக்கீரனின் ஆண்மைமிக்க செயல்பாடுகள் விளங்கும்.

2020, பிப். 29-மார்ச் 3 இதழ்:

Advertisment

என்னை மிகவும் பாதித்த கட்டுரையாக "எரிந்த ஜன நாயகம்' என்னும் கட்டுரையை சொல்லலாம். அரச பயங்கர வாதத்தின் வெறியாட்டம் ஒவ் வொரு வார்த் தையிலும் வெளிப்பட்டு நிற்கிறது. 47 பேர் கொல்லப் பட்ட இந்த கொடூர நிகழ்வு, தமிழகத்திலும் நிகழும் என்ற எச்.ராஜாவின் பேச்சையும் அவரது டிவிட்டோடு பதிவு செய்திருப்பது, இதுபோன்ற வெறியர்களின் சீர்குலைவு வேலைகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்விதமாக இந்து பெண் ஒருவருக்கு இஸ்லாமிய பெண்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திக்காட்டி யிருப்பது நம்பிக்கை அளிக்கும் விஷயம். வலைவீச்சு பகுதியில் உள்ள மீம்ஸ்களை படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.

அட்டைப்படத்தில் வெறிபிடித்த இந்து ஒருவர் இஸ்லாமிய விஹாரை இடித்த படம் உள்ளது. சில தினங்களுக்குப் பின்னர் இதே விஹாரை இந்துக்களே புனரமைத்துக் கொடுத்துள்ளனர். அதையும் வெளியிட்டு, எங்களைப் போன்ற எண்ணற்ற மதநல்லிணக்கம் பேணுவோருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Advertisment

______________

வாசகர் கடிதம்!

தில்லாலங்கடி ஆட்டம்!

தி.மு.க. ந.செ.வின் தில்லாலங்கடிகளைப் பார்த்தால், அவர் கட்சிப்பணி செய்வதை விட மாற்றான் மனைவியோடு முறைதவறி போட்ட ஆட்டம்தான் அதிகமாக இருக்கும்போல.

-தே.மாரிமுத்து, சென்னை-38.

உரிய தகுதி + சான்றிதழ்!

""போலி ஆசிரியர்கள் + கல்வி அதிகாரிகள் = சென்னை பள்ளிகள்'' என்ற தலைப்பில் நக்கீரன் 2020, பிப்.19-21 இதழில் வெளியான செய்தியில் தன்னைப் பற்றி வெளியாகியிருக்கும் செய்திகள் உண்மைக்கு மாறானவை என்று தெரிவிக்கும் ஆசிரியர் ஜஸ்டின், தன்னுடைய சான்றிதழ்கள் உண்மையானவை என்றும், உரிய கல்வித் தகுதியுடன், முறையான அங்கீகாரத்துடன் பணியினை தொடர்வதாகவும் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

(-ஆர்.)