பார்வை -யு அப்துல்நாசர்

aa

parvai

சுமார் 30 ஆண்டுகளாக "நக்கீரன்' இதழின் வாசகனாக இருப்பதில் பெருமையும் சந்தோஷமும் கொண்டுள் ளேன். துணிவே துணை என்ற தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர் நமது நக்கீரன் ஆசிரியர் அவர்கள்.

இந்தப் பத்திரிக்கை பணியில் வெற்றிபெற அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம் என்பதை படித்து தெரிந்தவன். திக்கற்றவர்களுக்கு அல் லாவே துணை என்பது போல ஏழை- எளிய, நடுத்தர மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நக்கீரன் விளங்கிவருகிறது. நக்கீரன் செய

parvai

சுமார் 30 ஆண்டுகளாக "நக்கீரன்' இதழின் வாசகனாக இருப்பதில் பெருமையும் சந்தோஷமும் கொண்டுள் ளேன். துணிவே துணை என்ற தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர் நமது நக்கீரன் ஆசிரியர் அவர்கள்.

இந்தப் பத்திரிக்கை பணியில் வெற்றிபெற அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் ஏராளம் என்பதை படித்து தெரிந்தவன். திக்கற்றவர்களுக்கு அல் லாவே துணை என்பது போல ஏழை- எளிய, நடுத்தர மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நக்கீரன் விளங்கிவருகிறது. நக்கீரன் செய்தியினால் பதவிபெற்ற அரசியல் வாதிகளும் உண்டு... பதவி பறிபோன அரசியல்வாதிகளும் உண்டு. காரணம், நக்கீரன் இதழை வெளியே விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் அதில் வரும் செய்தியை அறிந்து கட்சிக்குள் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் கள் என்பதற்கு பல்வேறு சம்பவங்கள் உள்ளன.

2020, பிப்.26-28 இதழ்:

ராங்-கால் செய்தியில் ரஜினி கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றிபெறலாம் என்று கூறப் பட்டுள்ளது. நானும் ஒரு காலத்தில் ரஜினி ரசிகன்தான்; ஆனால் அவர் காலம் கடந்து முடிவு எடுப்பதோடு சுயமாக சிந்தித்து செயல்படவில்லையோ என்று தோன்றுகிறது.

மதுரை பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நக்கீரன் என்ன சொல்லியுள்ளது என்பதை தொண்டர் கள் முன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு அரசியல் தலைவரும் உண்மையைத் தெரிந்துகொள்ள நக்கீரனைப் படிக்கிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. "ஆட்டுவிக்கும் டிக்டாக் போதை! தத்தளிக்கும் குடும்ப உறவுகள்' இச்செய்தி செல்போன் பயன்படுத்தும் இளைஞர்கள், இளம் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் தவறான பாதைக்குச் சென்று சீர்கெட்டுப் போகிறார்கள் என்பதற்கு சாட்சி.

"சில்மிஷ டார்ச்சரில் சிறைத்துறை பெண்கள்!' இந்தச் செய்தியின் மூலம் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

_________________

வாசகர் கடிதங்கள்!

மணியரசனின் கேள்வி!

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிற முதல்வர், அதன் நிர்வாகத்தில் தனது தலைமையை முன்னிலைப்படுத்துகிறார். இதெல்லாம் தெரிந்த அவருக்கு "காவிரிக் குழுவில் விவசாயப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்கிற அடிப்படை தெரியாமல் போனது ஏன்?' பெ.மணியரசனின் இக்கேள்வியால் சந்தேகச்சூடு றெக்கை கட்டிப் பறக்கிறது.

-எஸ்.பார்த்திபன், அரியலூர்.

ஓவர்!

இந்தியாவுக்கு இரவு-பகலாக உழைப்பதாக மோடியை பரிந்து பேசும் பெரிய அண்ணன் ட்ரம்பை கலாய்த்த "வலைவீச்சு' கமெண்ட் கொஞ்சம் ஓவர்.

-ஆர்.சிவா, ஒரத்தநாடு.

nkn040320
இதையும் படியுங்கள்
Subscribe