"புலனாய்வு இதழ்களில் நம்பர் 1' "நக்கீரன்' என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், மக்களைப் பாதிக்கக்கூடிய வில்லங்கமான செயல் தமிழகத்தில் எங்கு நடந்தாலும், அதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது நக்கீரன்தான். செய்திகளெல்லாம் சுடச்சுடத்தான். ஆறிய பழங்கஞ்சியாய் அரதப்பழசான செய்திகளை, தன் வாசகர்களுக்கு நக்கீரன் ஒருபோதும் தந்ததில்லை.
2020, பிப். 22-25 இதழ்:
"பொள்ளாச்சி கொடூரம்! மறைக்கப்படும் வீடியோக்கள்'’
"புலனாய்வு இதழ்களில் நம்பர் 1' "நக்கீரன்' என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. ஏனென்றால், மக்களைப் பாதிக்கக்கூடிய வில்லங்கமான செயல் தமிழகத்தில் எங்கு நடந்தாலும், அதை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது நக்கீரன்தான். செய்திகளெல்லாம் சுடச்சுடத்தான். ஆறிய பழங்கஞ்சியாய் அரதப்பழசான செய்திகளை, தன் வாசகர்களுக்கு நக்கீரன் ஒருபோதும் தந்ததில்லை.
2020, பிப். 22-25 இதழ்:
"பொள்ளாச்சி கொடூரம்! மறைக்கப்படும் வீடியோக்கள்'’ என்ற அட்டைப்படக் கட்டுரை யில், குற்றம் சாட்டப் பட்டுள்ள திருநாவுக்கர சின் அப்பா, தன் மகனை சாட்சி ஆக்கு வதற்காக, வி.ஐ.பி.க் களை பிளாக்மெயில் செய்யும் உத்தி அதிர வைக்கிறது. போராட்டத்தின்போது போடப்பட்ட குப்பைகளை, தாங்களே அள்ளிய தமிழக முஸ்லிம் களின் கட்டுப்பாடு மிக்க செயல்பாட்டினை, பொதுவெளியில் போராட வருபவர்கள் கடைப் பிடித்தால், நிச்சயம் கவனம் ஈர்க்க முடியும். தமிழருவி மணியன் மிகமிக நேர்மையானவர் என்றல்லவா நினைத்தோம். பசியோடு இருப்பதாகச் சொல்கிறாரே மாவலி?
டி.என்.பி.எஸ்.சி. மோசடி விவகாரத்தில் லாஜிக் இல்லாத மேஜிக் செய்து மக்களை ஏமாற்ற முயற்சிக் கும் அரசாங்கத்தின் செயல்பாடு, ஆட்சி இயந்திரத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் "இந்தியன் 2'-ல் ஜமீன்தார் வேடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நானும் நடிக்கிறேன். மூவரை பலிகொண்ட அந்த கிரேன் விபத்தை அசம்பா விதம் என்றே பலரும் நினைக்கிறோம். செம்பரம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு பகுதி என்பதால் மண் பலம் இல்லாததும் விபத்துக்கான காரணம் என்பது அதிர்ச்சி யளிக்கிறது.
ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவி கேட்டு ஓ.கே. வாங்கிட்டேன்னு நடிப்பு பல்கலைக்கழகமான ஓ.பன்னீரிடம் எடப் பாடி நடித்ததை யும், அவ ரைக் கட்டித்தழுவி ஓ.பி.எஸ். உள்ளுக் குள் சிரித்ததையும் ராங்-காலில் விவரித்த விதம், ‘"நீங்க உலக மகா நடிகனுங்க...'’ என்று கூவச் செய்து, விலாநோக என்னைச் சிரிக்க வைத்தது.
______________
வாசகர் கடிதங்கள்!
முற்றுப்புள்ளி!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின், தேர்தல் பணியில் பிரசாந்த் கிஷோரின் எல்லையை வரை முறைப்படுத்தி... மா.செ.க்களின் முணுமுணுப்புக்கு கச்சிதமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
-ஆர்.அருணன், சங்ககிரி.
பாராட்டு!
வங்கி அதிகாரியின் வில்லங்க உறவுகளைப் படிக்கும்போதே கோபம் கொப்பளிக்கிறது. பெண் களின் பலவீனத்தைப் போதைப் பொருளாக்கி அனுபவித்த தன் கண வரை சிறைக்கு அனுப்பிய மனைவி யின் செயல் பாராட்டுக்குரியது.
-ஆர்.பி.நந்தினி, கடலூர்.