பார்வை!-ச.கஸ்தூரி ரெங்கன்

dd

ff

டிகர்திலகத்தின் படத்தை முன்அட்டையில் தாங்கி வெளிவந்த அந்த துவக்க நாட்களிலிருந்து நக்கீரனைத் தொடர்கிறேன்.

மிகச்சிக்கலான பன்மைத்துவம் கொண்ட நமது சமூகத்தை அரசியல் தெளிவு கொண்டோராக்குவது கடும் சவால். தேசத்தை நேசிக்கும், சமத்துவத்தை போற்றும், சமூக நீதியை முன்னிறுத்தும் யாருக்குமே வெகுமக்களை, அரசியல் விழிப்புணர்வு கொண்டோராக்குவது, எவ்வளவு அவசியம் என்பது ஒரு நீண்ட பெருமூச்சோடு அணுகும் விஷயம். நான்காவது தூணின் அறமும் கொடையும் தியாகமும் தேவைப்படுவத

ff

டிகர்திலகத்தின் படத்தை முன்அட்டையில் தாங்கி வெளிவந்த அந்த துவக்க நாட்களிலிருந்து நக்கீரனைத் தொடர்கிறேன்.

மிகச்சிக்கலான பன்மைத்துவம் கொண்ட நமது சமூகத்தை அரசியல் தெளிவு கொண்டோராக்குவது கடும் சவால். தேசத்தை நேசிக்கும், சமத்துவத்தை போற்றும், சமூக நீதியை முன்னிறுத்தும் யாருக்குமே வெகுமக்களை, அரசியல் விழிப்புணர்வு கொண்டோராக்குவது, எவ்வளவு அவசியம் என்பது ஒரு நீண்ட பெருமூச்சோடு அணுகும் விஷயம். நான்காவது தூணின் அறமும் கொடையும் தியாகமும் தேவைப்படுவது இந்தப் புள்ளியில்தான். இந்தப் புள்ளியில் சார்புகளில்லாது செயல்படும் ஊடகங்களில் முதலிடத்தில் இருப்பது "நக்கீரன்'.

துவக்க நாட்களில் அரசு அலுவலகங்களில் காரண மின்றி தாமதப்படும் தங்கள் பணிகளை உடனே முடித்துக் கொள்ள உச்சரித்த மந்திரம் "நக்கீரன் நிருபர் என் நண்பர்' என்பதை பல அரசு அலுவலகச் சுவர்கள் மௌனமாய் நகைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தன. தொடர்களில் அதிமுக்கியமாக நான் கருதுவது "இந்து மதம் எங்கே போகிறது' எனும் கட்டுரைத் தொடரைத்தான்.

2020, பிப். 19-21 இதழ்:

தமிழகம் முழுதும் நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்த கட்டுரை அரசியல் தலைமைக்கும், அதிகாரத் தலைமைக்குமிடையே இருக்கும் பெரும் பிரச்சினையை தெளிவாகச் சொல்லியிருக்கிறது. தமிழகம் இதுபோன்ற சிக்கலில் இதுவரை இருந்ததில்லை. முதல்வருடன் ஒற்றைக்குரலில் பேசிய அதிகாரியின் குரல் இன்று நக்கீரனை வாசித்த எளிய மனிதர்களின் இதயத்தில் தொடர் சலனத்தை உண்டாக்கியிருக்கிறது.

அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பாலில் துறை சார்ந்த தில்லுமுல்லு, போலி ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள், சென்னை பள்ளிகள் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ள கட்டுரை சிறப்பு. "சண்டை செய்யும் தெருக்குரல்...' போராளிகளை ஈர்க்கும் அறிவுக்குரல். அருமையான பதிவு. இப்படி அரசியல், கல்வி, கலாச்சாரத் தளங்களில் "நக்கீரன்' பாய்ச்சிய புதுவெள்ளம் கசடுகளை அடித்துச் செல்லும் காட்டாறு.

_______________

வாசகர் கடிதங்கள்!

கிராமிய வீரர்கள்!

"கம்பாலா' விளையாட்டுப் போட்டியில் என்னவொரு ஆக்ரோஷ ஓட்டம். அடேங்கப்பா... இளைஞர் சீனிவாச கவுடா ஏதோ தும்பா ராக்கெட் வேகத்துல பறந்திருப்பார் போல. என்றாலும்கூட... அவர், உசைன்போல்ட் சாதனையை மிஞ்சு வதற்கு உறுதுணையாக இருந்த எருமை மாட்டையும் ஒரு வீரனாகப் பாவித்து பாராட்டத்தான் வேண்டும்.

-எஸ்.மணிமேகலை,வாணியம்பாடி.

தனியார்மயம்!

"அட்சய பாத்திரா' திட்டம், சத்துணவு திட்டத்தை முடக்குவதற் கான முன்னோட்டமா.. இதிலும் தனியாரின் ஆதிக்கமா? கர்நாடகாவில் சோடைபோன இத்திட்டத்தை தமிழகத்தில் புகுத்தி ஏழைப்பிள்ளை களின் வயிற்றில் அடிக்கலாமா?

-ஆர்.பி.இளங்கோ, கள்ளக்குறிச்சி.

nkn260220
இதையும் படியுங்கள்
Subscribe