pp

வாழ்நாளில் மறக்க முடியாத இதழாக இன்றளவும் "நக்கீரன்' உள்ளது. கல்லூரியில் படிக்கின்ற காலங்களில் புலனாய்வு இதழ்கள் மீது மிகுந்த ஆர்வம் எனக்கு உண்டு. அவ்வப்போது நடைபெறும் துயரச் சம்பவங்களை தோலுரிக்கும்போது, நக்கீரனின் துணிச்சலைக் கண்டு வியந்துள் ளேன். அரசியல் அலசலாகட்டும், சமுதாயத் தில் நடக்கும் அவலங்களாக இருக்கட்டும் அது சார்ந்த கட்டுரைகள் நம் கண்முன்னே வந்து நிற்கும். இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை நடத்துவது என்பது சவாலான பணியாக உள்ளது. நவீன டெக்னாலஜி ஆக்கிரமிப்பு அதிகரித்தாலும், மாற்றத் திற்கு ஏற்ப தன்னையும் மாற்றியமைத்துக் கொண்டு, இன்றும் நக்கீரன் வீறுநடை போடுவது மகிழ்ச்சிக்குரியது. இதழ்களை விற்கும் முகவரிலிருந்து, எழுத்தாளர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் உரிய தேவைகளையும், மரியாதையையும் தரும் நக்கீரன் ஆசிரியரை ஒரு பத்திரிகையாளராக, பதிப்பாளராக பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2020, பிப். 15-18 இதழ்:

"விஜய் க்ளியர்'’கட்டுரை க்ளியராக இருந்தது. விஜய் சேதுபதியின் டார்கெட் டுக்கு அவரின் ட்வீட் அருமை. மாவலி பதில்கள் நச். தயாநிதியின் அதிரடி உரை பாராளுமன்றத்தை மட்டுமல்லாது மக்களையும் உலுக்கியுள்ளது. கெஜ்ரி வாலின் ஒழுக்கத்தை கூறி, "தமிழ் நாட்டுக்கு நாதியே இல்லையா?' என்று பழ.கருப் பையா குரல் எழுப்பி யிருக்கிறார். நியாயமான, ஒழுக்கமான இளைய சமுதா யம் காது கொடுத் துக் கேட்டால் அவர் கேட்டது கண்டிப்பாக கிடைக் கும். டெண்டுக்குள் சீரழியும் பெண்கள் கட்டுரை படித்து அதிர்ந்தேன்.கொடைக் கானல் என்றால் டெண் டும், போதைக் காளானும் மனதிற்குள் வந்து செல்கின்றன.

Advertisment

______________

வாசகர் கடிதங்கள்!

துப்பறியும் சங்கர்லால்!

Advertisment

ராங்-கால் பகுதியில் ரஜினியும் பா.ம.க.வும் கூடு கட்டும் சங்கதி, தி.மு.க.வில் பயணிக்கும் பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை மிகத்துல்லியமாக துப்பறிந்துள்ளார் சங்கர்லால்.

-கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77.

தொழிலாளர் குரல்!

புதுச்சேரி ஏ.எஃப்.டி. மில்லை மூடக்கூடாததற்குத் தொழிலாளர்கள் சொல்லும் காரணங்கள் நியாய மானவை. "நட்டத்தில் இயங்கும் மில்லை லாபத்தில் இயங்கச் செய்ய முடியும்' எனும் அவர்களின் உற்சாகத் துக்கு மத்திய-மாநில அரசுகள் ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே!

-எஸ்.பி.பார்த்திபன், திருப்பூர்.