பார்வை!-க.நாகராஜன்

parvai

parvai

மிழ்ச் சூழலில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு புலனாய்வு இதழ் நடத்துவது சாதாரண வேலையல்ல.… நக்கீரன் இதழ் அதை தொ டர்ந்து செய்துவருகிறது. ஆசிரியர் நக்கீரன் கோபால் பெரிய நெருக்கடிகளுக்கிடை யில் பல போராட் டங்களை சந்தித்து இதழை சிறப்பாக நடத்திவருவது பிர மிக்கத்தக்கதாக இருக்கிறது.

2020 பிப்.05-07 இதழ் :

மத்திய அரசின் பட்ஜெட் கு

parvai

மிழ்ச் சூழலில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு புலனாய்வு இதழ் நடத்துவது சாதாரண வேலையல்ல.… நக்கீரன் இதழ் அதை தொ டர்ந்து செய்துவருகிறது. ஆசிரியர் நக்கீரன் கோபால் பெரிய நெருக்கடிகளுக்கிடை யில் பல போராட் டங்களை சந்தித்து இதழை சிறப்பாக நடத்திவருவது பிர மிக்கத்தக்கதாக இருக்கிறது.

2020 பிப்.05-07 இதழ் :

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து ஜெயரஞ்சன் அவர்களின் நேர்காணல், பா.ஜ.க. அரசின் தில்லுமுல்லுகளை, வாய்ஜாலங்களை தோலுரிக்கிறது "தி.மு.க. எங்கே போகிறது' என்ற கட்டுரை. 2021-ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் குறித்த தி.மு.க.வின் அரசியல் வியூகங்களை காட்டுகிறது. இறுதியில் கட்சி அரசியலையும் கார்பரேட் ஆலோசனையையும் பேலன்ஸ் செய்வாரா என்று முடித்திருப் பது சிறப்பு.

வழக்கம்போல் மாவலி பதில்கள் நச். டி.என்.பி.எஸ்.சி. குறித்த புலனாய்வு பெரிய திமிங்கிலங்களை வெளிக்கொண்டுவர ஒரு சிறு வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. ‘""நான் லஞ்சம் வாங்கமாட்டேன். வாங்குபவர்களை கண்டுகொள்ளமாட்டேன் என்பது நேர்மையா''’ என்ற கேள்வி கவனிக்க வேண்டியது. பொதுத் தேர்வு விபரீதம் கட்டுரையில் ஆசிரியர் மகாலட்சுமியின் ஆதங்கம் தேர்வை அரசு ரத்து செய்து அறிவித்த பிறகும் அதிர்ச்சியாகவே உள்ளது. பழ.கருப்பையா அவர்களின் அடுத்த கட்டம் தொடரில் ஸ்டாலின்மீது வைக்கும் குற் றச்சாட்டுகள் அதீதமானவை.

___________

வாசகர் கடிதங்கள்!

சர்வதேச "தெறி'!

உள்நாட்டு சங்கதிகளை பகிர்ந்து வந்த "தெறி' பகுதியில், இஸ்ரேல்-பாலஸ்தீன பதற்றத்தில் அமெரிக்காவின் ஓரப் பார்வை குறித்த சர்வதேச செய்தியும் பங்கேற்பது என்னை மாதிரி பாமரனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

-தே.குணா, கும்பகோணம்.

"பட்ஜெட்' வீச்சு!

"வலைவீச்சு' ஏரியா எப்போதும் சிரிப்புக்கும் சிந்தனைக்கும் பஞ்சம் வைப்பதில்லை. ஆனால் இந்த பட்ஜெட் வீச்சில் "எதிர்பார்த்ததும் நடந்ததும்...' கமெண்ட், மத்திய அரசின் பொருளாதார அறிவை காட்சியே படுத்திவிட்டது.

-அ.ம.சிவா, திருச்சி.

nkn120220
இதையும் படியுங்கள்
Subscribe