ஆபத்து - பேரழிவு! , பொறியாளர், கண்டரமாணிக்கம், சிவகங்கை மாவட்டம்.
எனது இளம் வயதிலிருந்தே "நக்கீரன்' படிப்பதில் மிகவும் நாட்டம் கொண்டவன், இதற்குக் காரணம் அரசியலின் மீதான என் ஆர்வம். அதுமட்டுமின்றி நக்கீரனின் முன் அட்டைப் பக்கத்தில் நிரந்தர வாசகமான "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அது நக்கீரனுக்கு மிகவும் பொருந்தும்.
ஆட்டோ சங்கரில் ஆரம்பித்து சந்தன

ஆட்டோ சங்கரில் ஆரம்பித்து சந்தன வீரப்பன், பிரேமானந்தா, நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ், காஞ்சி சங்கராச்சாரியாரின் மறுபக்கம், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் என அனைத்தையும் தைரியமாக அம்பலப்படுத்திய பெருமை நக்கீரனுக்கு மட்டுமே. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கி கடைசி மூச்சுவரை அவரைப் பற்றிய உண்மைச் செய்திகளை தைரியமாக வெளியிட்ட அண்ணன் நக்கீரன்கோபால் அவர்களுக்கு "ராயல் சல்யூட்'.
2020 பிப்.01-04 இதழ் :
"தலைநகரத்தில் டெல்லி தர்பார்' செய்தி, டெல்லி அரசியலை மிகத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. "மலைக்குள் மறையும் சூரியன்' செய்தியின் தலைப்பே அந்த செய்தியின் உண்மையை பிரதிபலிக்கிறது. "மது -மாது -சூது காசினோ சூதாட்டம் செய்தி' நடுத்தர குடும்பத்தினருக்கும் செல்வந்தர்களுக்கும் ஓர் எச்சரிக்கை. "ஹைட்ரோ கார்பன் எடுத்தால் தண்ணீர் கிடையாது' என்ற கட்டுரை அப்பட்டமான உண்மை. "சீனாவுக்கு கொரோனா வைரஸ் தமிழகத்துக்கு டி.என்.பி.எஸ்.சி.' -டைட்டிலே சொல்லிவிட்டது பெரும் ஆபத்தையும் பேரழிவையும். அதிலும் எங்கள் மாவட்டத்தின் பெயர் இதில் அடிபடுவது எங்களுக்கு பெரும் தலைகுனிவு. சித்தாண்டி போன்றோர் அம்புதான், இதை எய்தவர்களை நக்கீரன் மட்டுமே வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழி வரலாற்றை தேடும் காலப்பயணம் தமிழர்களுக்கு ஒரு பொக்கிஷம்.
____________________
வாசகர் கடிதங்கள்!
சர்ச்சையான ஐயனார்!
கையனார்தான் ஐயனாராக மருவியதாக ஒரு பேச்சுவழக்கு உண்டு. அப்படிப்பட்ட ஐயனாரைத்தான் குடியரசுதின விழாவில் "பூணூல்', "டாலர்' என மாற்றியிருக்கிறார்கள். "வடக்கே' சென்றதால் ஐயனாரையும் "சர்ச்சை'க்குரியவராக ஆக்கிவிட்டார்கள் போல.
-மகி.இந்திரன், தேவகோட்டை.
காலக் கண்ணாடி!
பெரியாரை, ரஜினி வியந்த தருணங்களும் உண்டு; விமர்சித்த தருணங்களும் உண்டு என்பதற்கு டூரிங் டாக்கீஸில் காலக் கண்ணாடியாக பிரதிபலிக் கிறது "அணையா நெருப்பு' கட்டுரை.
-மு.சாதிக்பாட்ஷா, அரியலூர்.