பார்வை!-அன்புராஜா

pp

parvai

பெருகிவரும் ஊடக உலகத்தில் செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது என்பது எப்போதும் வாசகர்களுக்கு சவா லாகவே இருக்கிறது; ஆனால் உண்மையை மட்டும் அல்லாது திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பதைக் கூட வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற பணியை "நக்கீரன்' கச்சிதமாக செய்துவருகிறது.

2020, ஜன.29-31 இதழ்:

வியாபம் ஊழல் போல் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள விதம் அருமை. ஆ

parvai

பெருகிவரும் ஊடக உலகத்தில் செய்தியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது என்பது எப்போதும் வாசகர்களுக்கு சவா லாகவே இருக்கிறது; ஆனால் உண்மையை மட்டும் அல்லாது திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பதைக் கூட வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற பணியை "நக்கீரன்' கச்சிதமாக செய்துவருகிறது.

2020, ஜன.29-31 இதழ்:

வியாபம் ஊழல் போல் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளை படம் பிடித்துக் காட்டியுள்ள விதம் அருமை. ஆடுகளை வைத்து ஓநாய்கள் தப்பித்துக் கொள்ள லாம் என நினைத்தால் நக்கீரனின் பார்வையில் அவர்கள் தப்பிக்க முடியாது என்பதை அந்தக் கட்டுரை வெட்ட வெளிச்சமாக காண்பித்தது. பானிபூரி விற்க வந்தவர்கள் இன்று பல துறைகளிலும் நம்மை அடிமையாக்கும் கொடுமை பற்றியும், வந்தாரை வாழவைத்த தமிழன் வாழ வழி இல்லாது போவது குறித்தும் நாட்டு நடப்பை இயல்பாய் எடுத்துக் காண்பித்தது "தமிழ்நாடு வட இந்தியர்களுக்கு குத்தகையா?' செய்திக் கட்டுரை. சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்த தேனி எம்.பி.க்கு எதிரான இசுலாமியர்களின் அலை குறித்தும், தி.மு.க.வில் நேருவுக்கு கொடுக்கப்பட்ட பதவியால் ஏற்பட்ட அதிர்வுகள் பற்றியும் மிகத் துல்லியமாக எடுத்துச் சொல்லியிருந்தீர்கள்.

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்துவது குருவியின் தலையில் பனங்காய் என்பதை எவருக்கும் புரியும்படியான மீம்ஸுடன் (வலைவீச்சு) விளக்கிச் சொல்லியிருந்தது மிகஅருமை. பொறியில் சிக்கிய எலிபோல நித்தியின் நிலையை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருப் பதுதான், "நக்கீரன்' இதழ் அனைவருக்கும் உரித்தானது என்பதை நிரூபிக்கிறது.

____________________

வாசகர் கடிதங்கள்!

நிர்க்கதியான குடும்பம்!

டிக்டாக், வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக் போன்றவை குடும்பங்களின் விரிசலுக்கு ஒரு காரணியாக உருவெடுத்து வருகிறது. டிக்டாக்கால் கணவனை வேறொரு பெண்ணிடம் பறிகொடுத்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கும் சுகன்யாவையும் அவரது கைக்குழந்தையையும் பார்க்கும்போது "அய்யோ பாவம்' என்று கடந்து போய்விட முடியவில்லை.

-ஆர்.கே.மாலதி, விசாகப்பட்டினம்.

வழக்குக்கு கைது!

அட இ.பி.எஸ்.ஸை விடுங்க, தன் கூடவே செவ்வாழையாய் திரிந்த கே.சி.பி.யின் கைதை ஓ.பி.எஸ். நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் வழக்கு என்று வரும்போது "அரசியல்ல இதெல்லாம் சாதா ரணமப்பா' என தப்பிக்கவே பார்க்கிறார்கள்.

-ஆர்.கண்ணன், கடலூர்.

nkn050220
இதையும் படியுங்கள்
Subscribe