உண்மையை தீரத்துடன் சொல்லும் ஒரே பத்திரிகை "நக்கீரன்'தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒளிவு மறைவின்றி அச்சம் இல்லாமல் ஆன்மிகம், அரசியல் உள்ளிட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை தெளி வாக வெளியிடும் நக்கீர னின் எழுத்து எளிய நடையில் நச்சுன்னு இருப்பதால் தொடர்ந்து படிக்கவைக்கிறது. ஒரு சின்ன புத்தகத்தில் நாட்டில் நடக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் தோலுரிக்கிறது. ஆசிரியர் நக்கீரன் கோபால
உண்மையை தீரத்துடன் சொல்லும் ஒரே பத்திரிகை "நக்கீரன்'தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒளிவு மறைவின்றி அச்சம் இல்லாமல் ஆன்மிகம், அரசியல் உள்ளிட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை தெளி வாக வெளியிடும் நக்கீர னின் எழுத்து எளிய நடையில் நச்சுன்னு இருப்பதால் தொடர்ந்து படிக்கவைக்கிறது. ஒரு சின்ன புத்தகத்தில் நாட்டில் நடக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் தோலுரிக்கிறது. ஆசிரியர் நக்கீரன் கோபால் இந்த பத் திரிகையை நடத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை... அவர் பேசிய வீடியோ வை சமூக வலைத்தளத்தில் பார்கும்போது தைரியத்தைக் கொடுக்கிறது. விவசாயிகளுக்கு பிரச்சனை வரும் போது மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்து அறியவும் அதனை தடுக்க என்ன வழி என்பதற்கும் "நக்கீரன்' வாசிப்புத் தேடலை ஏற்படுத்துகிறது.
2020, ஜன. 25-28 இதழ்:
தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் வெல்லுமா? நக்கீரனின் பார்வை தெளிவாக உள்ளது. தமிழில் குடமுழுக்கு செய்தால் அனைவருக்கும் புரியும் -தமிழ் மன்னன் கட்டிய கோயில்தானே இது? ரஜினி, பெரியார் விஷயத்தில் சொல்லிக் கொடுத்து சொல்லியுள்ளதை தெளிவுபடுத்தியுள்ளது. செய்திக்கு ஏற்றவாறு அட்டைப்படம் போடுவதில் நக்கீரனுக்கு இணை நக்கீரனே. மாவலி பதிலில் ஜெ.ஆவி குறித்த பதில் சூப்பர். குடியுரிமை சட்டம் குறித்த கட்டுரை, எங்களைப் போன்ற விவசாயிகளுக்கும் எளிதில் புரிய வைத்துள்ளது. வடகலை, தென்கலை பிரச்சினையில் உண்மையை உரக்கச் சொல்லியுள்ளது. இதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
_________________
வாசகர் கடிதங்கள்!
பாதுகாப்பில் அக்கறை!
இந்தியா -இலங்கை -சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வந்து விடக்கூடாது என்பதில் அக்கறையாய் செயல்படுகின் றன. இலங்கை ராணுவத்துக்கு இந்தியா "அள்ளிக் கொடுப்பதற்கு' எதிர்ப்பு தெரிவிக்கும் வைகோவின் கருத்திலும் நியாயம் இருக்கவே செய்கிறது.
-கா.சிவானந்தன், புதுக்கோட்டை.
மறக்கப்படும் வாக்குமூலம்!
5-ஆவது கல்யாணத்தையும் உற்சாகமாகவே ஏற்றுக்கொண்டுள்ளார் ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். அடுத்தடுத்த கல்யாணத்தில் நம்பிக்கை வைக்கும் அவர், ஒவ்வொரு விவாகரத்தின்போதும் "என் வாழ்க்கை இணையரை "புரிந்துகொண்டே' கல்யாணம் கட்டிக்கொள்கிறேன்' என்கிற வாக்குமூலத்தை மட்டும் வசதியாய் மறந்துவிடுகிறார் போல.
-மு.சரிபாபானு, காயல்பட்டினம்.