Advertisment

பார்வை!-வெற்றி

parvai

parvai

கோவையில் ஒரு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவரிடம் மாணவர்கள் நாங்கள் கேள்வி கேட்கிறோம். அவர் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

Advertisment

என்னுடைய கேள்விக்கும் பதில் அளித்தார். திருப்தி அடையாத நான் அவரை மடக்கும் விதமாக ஒரு கேள்வி கேட்கிறேன். பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கரவோசை. அந்தக் கேள்விக்கு கிடைத்த வரவேற்பு அது. மேடையில் அமர்ந்திருந்த ஆசிரியரைப் பார்க்கிறேன். அவரும் குழந்த

parvai

கோவையில் ஒரு நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர் ஆசிரியர் நக்கீரன்கோபால் அவரிடம் மாணவர்கள் நாங்கள் கேள்வி கேட்கிறோம். அவர் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

Advertisment

என்னுடைய கேள்விக்கும் பதில் அளித்தார். திருப்தி அடையாத நான் அவரை மடக்கும் விதமாக ஒரு கேள்வி கேட்கிறேன். பார்வையாளர்கள் மத்தியில் இருந்து பலத்த கரவோசை. அந்தக் கேள்விக்கு கிடைத்த வரவேற்பு அது. மேடையில் அமர்ந்திருந்த ஆசிரியரைப் பார்க்கிறேன். அவரும் குழந்தையின் குதூகலத்துடன் என் கேள்வியை ரசித்து கைதட்டிக்கொண்டிருக்கிறார். அதுதான் நக்கீரன்கோபால். அதுதான் நக்கீரன். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் பத்திரிகை துறையில் பணியாற்றி இருக்கிறேன்.

Advertisment

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் நேர்மையாகவும், துணிச்சலாகவும் பணியாற்ற, என்னையே அறியாமல் ஒரு வினையூக்கியாக நக்கீரன் இதழ் இருந்திருக்கிறது.

2018, ஜூன் 27-29 இதழ்:

இந்த இதழைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எட்டு வழிச் (அழிவு) சாலை எதிர்ப்பிதழ் போன்று வெளிவந்திருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். அநீதியை கண்டு பொறுக்க முடியாமல் மக்களும் விவசாயிகளும் போராடிக்கொண்டிருக்கும்போது, நக்கீரனும் தன் பங்குக்கு களத்தில் நிற்கிறது. இதுதான் நக்கீரன்.

மொழிப்போரில் முக்கியப் பங்காற்றி வரலாற்றில் இடம்பிடித்த சென்னை -பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் இடையே பரவிவரும் வன்முறை கலாச்சாரத்தைச் சாடும் வன்முறைப் பயணத்தில் எதிர்காலத் தலைமுறை‘ மற்றும் தமிழ்நாடு ஆளுநரின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் ‘ஸ்ரீரங்கம் டூ ராஜ்பவன்‘போன்ற கட்டுரைகள், எப்போதும் ஹிட் அடிக்கும் ‘வலைவீச்சு‘ பகுதி என இந்த இதழ் எங்கும் நக்கீரனின் சமூக அக்கறை வழக்கம்போல் வெளிப்பட்டிருக்கிறது.

வாசகர் கடிதங்கள்!

உணர்வும் ஊகமும்!

நக்கீரன் இளம் பத்திரிகையாளர் படையின் ஒவ்வொரு செய்தியிலும் அரசின் உளவுப் பார்வைக்கான விஷயங்கள் இருக்கின்றன. அத்துடன், இதுவரை இதழில் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளாத தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய நிருபர்கள் முத்திரைச் செய்திகளோடு புறப்பட்டு வருவார்கள் என்பதையும் ஊகிக்க முடிகிறது.

-அ.தீனா, சேலம்.

பொறுமையின் பொருமல்!

"போஷாக்கான ஒரு துறையை ஒதுக்கித் தருகிறேன்' எனச் சொன்ன எடப்பாடி, சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டாமா? அதான் பொறுமையை அடைகாத்தது போதும்னு வர்றவங்க, போறவங்ககிட்ட எல்லாம் பொருமலுடன் கடுகடுக்கிறார் உடுமலை.

-து.மணிமாறன், அம்பாசமுத்திரம்.

Parvai nkn06.7.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe