"யாமெய்யாக் கண்டவற்று ளில்லை" என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப வாய்மையும், நேர்மையும் ஊடகத்தில் நிலையாக பின்பற்றி வரும் புகழ் நக்கீரன் இதழுக்கே உண்டு என்றாலும் மிகையல்ல.
தமிழில் உள்ள புலனாய்வுப் பத்திரிகைகளில் புரட்சிகர பத்திரிகையாகத் திகழும் நக்கீரனில் வெளிவரும் ஒவ்வொரு புலனாய்வுச் செய்தியும் வாசகர்களுக்கு புரியவைத்து, ஊழல்வாதிகளை புலம்ப வைத்துவிடுகிறது. என் பள்ளிக்காலம் முதலே "நக்கீரன்' இதழை (சு)வாசிக்க ஆரம்பித்தேன். இன்றும் நக்கீரனுடனான விறுவிறு பயணம் தொடர்கிறது, பெருமிதம் தருகிறது.
அன்று, மொகலாய ஆட்சிக் காலத்தில் மன்னர் ஜஹாங்கீர் தன்னுடைய குழந்தை பிறப்பு செய்தியை அறிவதற்காக டில்லி முதல் ஆக்ராவரை தன் படையினரை நிறுத்தி கொடிகளின் மூலம் செய்தி பகிரப்பட்டது. இன்று, அயல்நாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கு, நக்கீரன் குழுமத்தின் செய்தியாளர் படைகள் இணைய வெளியில் பதிவேற்றும் செய்திகள் அனைத்தும் மதியிலேறுகின்றன.
மக்களை வஞ்சிக்கும் ஆட்சியாளர்களின் கயமைத்தனங்களுக்கு எதிரான அனைத்து செய்திகளும் நீதிச்சாட்டையாய் சுழல்கின்றன.
2020, ஜன. 22-24 இதழ்:
தமிழகத்தின் பசுமை வளமான டெல்டாவை அழிக்கும் மத்திய அரசின் போக்கு, மக்கள் கருத்தைக் கேட்காமல் ஹைட்ரோகார்பனைத் திணிக்கும் துணிவுக்கு வந்திருப்பது வேதனை தருகிறது. என்வழி தனிவழி’ என்பதுபோல் தன்மீதான கேள்விக்கணைகளுக்கு அசராமல் அசத்தலான பதில்களைத் தருகிறார் மாவலி. புத்தகத் திருவிழாவில் கருத்துரிமை நசுக்கப்படுவது இதுவே கடைசியாக இருக்கவேண்டும். எதிர்க்குரல்களை ஒடுக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். லட்சங்களில் பேரம் பேசினாலும் கொள்கை மாறாத திருநங்கை ரியா, நம்பிக்கை ஒளியாக மிளிர்கிறார்.
______________
வாசகர் கடிதங்கள்!
பாராட்டுகள்!
"தவிலா? செண்டையா? ஒரு பண்பாட்டுச் சண்டை' எனும் செய்தி, தமிழ்க் கலைகளுக்கு புத்துயிரூட்டுகிறது. நாட்டுப்புற கலை கள் மீதான அன்பை வெளிப்படுத்தி, எங்களின் பாரம்பரியத்துக்கு மரி யாதை செய்தமைக்காக நக்கீரனுக்கு ஏகோபித்த பாராட்டுகள்.
-ஓ.கிங்பைசல்,
நிறுவனர்-கலைத்தாய் அறக்கட்டளை, நாகப்பட்டினம்.
நன்றிகள்!
தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளம் நாட்டுப்புற கலைகள். எமது கலை வாழ்வியல் குறித்து சிறப்பாக எழுதி, பெருமை போற்றிய நக்கீரனுக்கு நன்றிகள் பல.
-பால.ரவிச்சந்திரன், தலைவர்,
நாகை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம்,
நாகை மாவட்டம்.