pp

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்கிற அடைமொழியை இன்றுவரை அடை காத்து வருகிறது "நக்கீரன்' இதழ் என்றால் அது மிகை யாகாது.

ஒரு செய்தியின் உண்மையை பல பத்திரிகைகள் வெளி யிடலாம். ஆனால், அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை துணிவுடன் எழுதி, அதையும் முதல் செய்தியாக முந்தித் தருகிறது "நக்கீரன்'. அதோடு நில்லாமல், கடைசிவரை உறுதியாக நின்று, எந்தப் பக்கமும் பிறழாமல், பத்திரிகை துறை மீது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துவதில் நக்கீரனுக்கே என்றும் முதலிடம்.

ஒரு செய்தியை நகரத்தில் இருப்பவர் களுக்கு புரிய வைப்பது மிகவும் சுலப மாக இருக்கலாம். ஆனால், கிராமப்புறங் களில் இருக்கும் எளியோருக்கு அது சென்றடைவது இன்றளவிலும் தடையாக இருக்கிறது. அப்படி இன்றும் வளர்ச்சி அடையாத ஊர்களில்கூட, அரசியல் நிலவரங்களை புட்டுப்புட்டு வைத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, சமூகப் பிரச்சினைகளையும் எந்தத் தயக்கமும் இன்றி வெளிக்கொண்டுவந்து, வெகுமக்களை சிந்திக்கவைத்த பெருமை நக்கீரனையே சேரும்.

Advertisment

1997-ல் இருந்து "நக்கீரன்' வாசகனாக இருப்பதிலும், கடந்த ஏழு ஆண்டுகளாக "நக்கீரன்' இதழை விற் பதிலும் உள மார பெரு மிதம் கொள் கிறேன்.

2020, ஜனவரி 08-10 இதழ்:

ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில், குற்றவாளிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். விசாரணை அமைப்புகளோ வேடிக்கை பார்க் கின்றன. தன் மகளின் மரணத்திற்கு நீதிகேட்கும் தந்தையின் சட்டப் போராட்டம் வெற்றிபெற வேண்டும்.

Advertisment

பணம் விளையாடிய ஊரக உள்ளாட்சித் தேர்தலால் மக்களுக்கு லாபம். மக்களைக் கலக்காத மறைமுகத் தேர்தலால், அவர்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கொள்ளை லாபம். நடக்குது பேரம். ஜனநாயகத் துக்கு ஜுரம்.

வன்கொடுமையில் சிக்கவிருந்த பெண்ணின் உயிரைக் காக்க, தன்னுயிரைத் துச்சமென இழந்த திருவள்ளூர் இளைஞர் யாகேஷ், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை.

வாசகர் கடிதங்கள்!

இலவச விளம்பரம்!

ஹலோ மிஸ்டர் சங்கர்லால், சென்னை எம்.ஜி.எம். மருத்துவ மனையில் சுகாதாரத்துறையோட ஒரு பெரும்புள்ளியின் பங்களிப்பு இருப்பதாகவும், அங்கே சிகிச்சையளிக்க பிரபல மருத்துவர்கள் நிர்பந்திக்கப் படுவதாகவும் பிராது கொடுத்தீங்க. இதையே இலவச விளம்பரமாக்கிடப் போறாங்க.

-கே.அருள்பிரகாஷ், கடலூர்.

சூரியனுக்கு "வலைவீச்சு'!

பிரபஞ்ச சூரியன் "ஓம்' என ஒலி எழுப்புகிறதாம். இயற்கை சக்தியை யும் மத அடையாளத்துக்குள் கொண்டுவந்துவிட பஜனை பாடிய பக்கத்து மாநில ஆளுநர் கிரண்பேடி நக்கீரன் வலைவீச்சில் சிக்கிவிட் டார்.

-ஆர்.தேவேந்திரன், ஆத்தூர்.