pp

"பொதுமக்கள் பிரச்சினை குறித்து ஆன்லைனில் புகார் கொடுப்பது எப்படி?' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறப்போர் இயக்கத்தின் மூலம் நடத்தும்போது, ஒவ்வொரு கூட்டத்திலேயும் ஒரு சம்பவத்தை உதாரணம் காண்பிப்பேன். நடிகர் விஜய் தனது பிறந்தநாளில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மோதிரம் அணிவிப்பார். அந்த நிகழ்வை குறிப்பிட்டு எழுதிய "நக்கீரன்' செய்தியில் விஜய் வந்ததால் மற்ற தாய்மார்கள், நோயாளிகள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டார்கள். ரசிகர்களின் தள்ளு முள்ளுவால் அவஸ்தைக்குள்ளானார்கள் என்று எழுதப்பட்டி ருந்தது. ‘இதேமாதிரி "என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட யாரிடம் அனுமதி வாங்கவேண்டும்?'’ என்று ஆர்.டி.ஐ. மூலம் கேட்டிருந்தேன். அந்த காப்பியை "நக்கீரன்' ஆபீசுக்கும் அனுப்பிவிட்டேன்.

உடனே, "நக்கீரன்' அலுவலகத்திலிருந்து எனக்கு போன் செய்து, ""அருமையான ஆர்.டி.ஐ. போட்டிருக்கீங்க சார். என்ன பதில் கொடுத்தாங்க?''’ என்று கேட்டாங்க. ""அதற்கெல்லாம், பதில் தரமாட்டாங்க''’ என்றேன். "என்னது பதில் தரமாட்டாங்களா? இருங்க நாங்க கேட்கிறோம்'’ என்று சொல்லிவிட்டு மருத்துவமனை நிர்வாகத்துக்கு அவரே போன் செய்துள்ளார். பதறியடித்துக்கொண்டு மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து போன் வந்தது. ""இனி, நோயாளிகளுக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதுதான் நோக்கம்''’என்றேன். அதிலிருந்து, விஜய்யும் அந்த மருத்துவமனைக்கு கேமராக்களுடன் செல்வதில்லை. இதுதான், நக்கீரனுக்கும் எனக்குமான உறவு.

2019, ஜன. 01-03 இதழ்:

Advertisment

அப்துல் கலாம் அவர்களின் 2020 கனவு பற்றியும் அதை பி.ஜே.பி. எவ்வாறு நாசம் செய்து வருகிறது என்பது பற்றியும் விளக்கி எழுதப்பட்ட கட்டுரை அருமை. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கோலம் போடும் போராட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் படங்கள் கொண்ட கட்டுரை பலருக்கு இந்த சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத் தையும், அகிம்சை முறையில் நடை பெறும் போராட்டங்களின் வலிமையை யும் புரிய வைத்திருக்கும். ஏமாற்றுப் பேர்வழி நித்தியானந்தாவை ஆரம்பம் முதல் விடாமல் தோலுரிக்கும் "நக்கீரன்', இந்த இதழிலும் சங்கீதாவின் மரணத்தில் நித்தி ஆசிரமத்தின் தொடர்பு பற்றி வெளியிட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

_____________

வாசகர் கடிதங்கள்!

Advertisment

அகழாய்வின் ஆதங்கம்!

அகழாய்வு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி நிலவரம் குறித்த பேட்டி, பல உண்மைகளை வெளிக் கொணர்கிறது. "என் ஆய்வுகளின் அறிக் கையை நானே நினைத்தாலும் பார்க்க முடியவில்லை' என்கிற அவரது ஆதங்கம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

-எஸ்.திலகவதி, புதுக்கோட்டை.

ஜால்ராக்களுக்குப் பதவி!

"பிபின் ராவத் போன்றவர்கள் நேரு காலத்திலும் இருந்தார்கள்' என்கிற மாவலியின் பதில் "சுருக்'கென்றிருந்தது. மக்களுக்கு எதிரான இப்படிப்பட்ட ஜால்ரா பார்ட்டிகளின் பாதுகாப்பில் தான் "தேமே'னு உட்கார்ந்திருக்கிறோம்.

-க.அருண்குமார், உடுமலைப்பேட்டை.