Advertisment

பார்வை! - திருஞான சம்பந்தம்

parvai

parvai

த்தொன்பது வருடங்களாக "நக்கீரன்' வாசகராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல பெருமிதமும்கூட. ஜர்னலிஸத்திலேயே இன்வெஸ்டிகேட்டிவ் ஊடகமாக மக்களுக்கு தகவல்களை கொடுப்பதுதான் நக்கீரனின் ஸ்பெஷல். அதுவும், எளிய மக்களுக்கு சென்றடையும் விதமாக தமிழ்நாட்டுச் செய்திகள் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க நடக்கும் தகவல்களை ஆராய்ந்து அது உண்மையா? பொய்யா? என்று புலனாய்வு செய்து சுவாரஸ்யத்துடன் செய்தி வெளியிடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்

parvai

த்தொன்பது வருடங்களாக "நக்கீரன்' வாசகராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல பெருமிதமும்கூட. ஜர்னலிஸத்திலேயே இன்வெஸ்டிகேட்டிவ் ஊடகமாக மக்களுக்கு தகவல்களை கொடுப்பதுதான் நக்கீரனின் ஸ்பெஷல். அதுவும், எளிய மக்களுக்கு சென்றடையும் விதமாக தமிழ்நாட்டுச் செய்திகள் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க நடக்கும் தகவல்களை ஆராய்ந்து அது உண்மையா? பொய்யா? என்று புலனாய்வு செய்து சுவாரஸ்யத்துடன் செய்தி வெளியிடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் மாணவர்களும் படிக்கும் விதமாக ரமேஷ் பிரபாவின் தொடர், வாழ்வியல் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக பாலியல் கல்வியை புரியவைக்கும் டாக்டர் நாராயண ரெட்டியின் தொடர் என பல கட்டுரைகள் நான் மிகவும் ரசித்தவை.

Advertisment

நக்கீரனின் போராட்ட வரலாறு ஒரு மைல்கல்லோடு நின்றதில்லை. பல சம்பவங்களை உள்ளடக்கிய பல மைல் கல்களை கடந்தது நக்கீரனின் ஊடகப் ‘போராட்டம். நித்தியானந்தாவின் கைலாசா தீவு குறித்த உண்மைகள், கலைஞானத்தின் சினிமா சீக்ரெட் தகவல்கள் பாராட்டுக்குரியவை.

2019, டிச. 28-31 இதழ்:

தஞ்சை பெரியகோயில் சிற்பி குஞ்சர மல்லர் பற்றிய அரிய தகவல்கள் அருமை. ஒரே இதழில் சி.ஏ.ஏ. பற்றிய மாணவர்கள் எதிர்ப்பு செய்தியும், பா.ஜ.க. தேசிய செயலாளர் பேட்டியும் பிரசுரித்திருப்பது நக்கீரனின் நடுநிலைத்தன்மையை காட்டுகிறது. ஏற்கனவே நாடு ஒரு தினுசா போய்க்கிட்டிருக்கு. இந்த லட்சணத்துல மோடியின் தேர்தல் தில்லுமுல்லு வேறயா?

இன்னும் அந்தக்கால நினைப்பி லேயே, இந்தக் காலத்தில் தொடர் எழுதிக்கொண்டிருக்கிறார் பழ.கருப்பையா. இத்தனை காலமும் இன்னல்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு, குடியுரிமைச் சட்டம் மேலும் ஒரு இடியாய் இறங்கியுள்ளது.

Advertisment

_____________

வாசகர் கடிதங்கள்!

கைதட்டி வாழ்த்து!

ஐயா நல்லகண்ணு அவர் கள் அரசியல் நீர்க்குமிழியில் ஓர் ஆச்சர்யம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கமும், தோழ ரின் பிறந்தநாளும் ஒரே தேதியில். இது எல்லோருக்கும் வாய்க்காது தான். அவர், நூற்றாண்டு வாழ் வில் ஜொலிக்க நாம் இப்போதே வாழ்த்திக் கை தட்டுவோம்.

-ஆர்.ஜீவானந்தம், ஈரோடு.

"ஓ"ரக்கண்ணின் "ராஜா'ங்கம்!

தங்கும் விடுதியில் அடாவடி செய்தி, ஒரே தடாலடியாக இருக்கிறது. விடுதி மேனேஜரின் கருத்து ஓ.ராஜாவின் கருத்திலிருந்து முரண்படுகிறது. இருவரில் யார் பொய் சொல்கிறார்கள் என்பது விளங்கவில்லை. எனினும் தடித்த வார்த்தைகளை கேட்கும்போது, நம் ஓரக்கண் சந்தேகப் பார்வை அவர் ராஜாங்கத்தின் மீதுதான் விழுகிறது.

-ஆ.ஆனந்த், தேனி.

nkn040120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe