"நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை ஒரு வரிச் செய்தியில் கடந்து செல்லும் பத்திரி கைகளில் இருந்து முற்றிலும் மாறாக, அதன் தீவிரத்தை உணர்ந்து தன்னு டைய புலனாய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்து அதை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நக்கீரன் இதழின் பிரதான பக்கங்கள் அனைத்திலும் அச்செய்தி யை வெளியிடும் துணிவும், உறுதியும் நக்கீரன் இதழுக்கு மட்டுமே உண்டு என்பது நாடறிந்த உண்மை. சோதனை கள் யாவற்றையும் சாதனைகளாக்கி பத்திரிகை சுதந்திரத்திற்கு வழிகோலும் நக்கீரன் இதழும், ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களும் பத்திரிகை உலகின் அசைக்க முடியாத "மாபெரும் சக்தி' என்றால் மிகையாகாது.
2019 டிச.14-17 இதழ் :
இந்திய குடியுரிமைச் சட்டம் கொண்டு வந்தபோது அதன் மீதான தி.மு.க.வின் நிலைப்பாட்டையும், நடந்த நிகழ்வையும் ரத்தின சுருக்கமாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகை யில் தெளிவாக கூறி, அ.தி.மு.க. ஆத ரித்ததால்தான் அச் சட்டம் நிறைவேறி யது என்பதை ராங்-காலில் சுட்டிக் காட்டி, எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருந் தால் அவரும் சட்டவிரோதமாக குடியேறியவராக கருதப்பட்டிருப்பார். அ.தி.மு.க. என்ற கட்சியே உருவாகி இருக்காது என்பதை உரக்கச் சொல்லி யுள்ளது. அ.தி.மு.க.வின் தகிடுதத்தங் களையும், கூட்டணிக் கட்சிகளுக்கு அல்வா கொடுத்து விட்டு அவர்களின் முதுகில் சவாரி செய்ய நினைப்ப தையும் "அ.தி.மு.க. உள்ளாட்சி தர்பார்' கட்டுரை வெளிச்ச மிட்டு காட்டுகிறது. தொலைக்காட்சி தொடர்களால் பெண் கள் மனரீதியாக பாதிக் கப்படுகிறார்கள், அத னால்தான் பல குடும் பங்களில் பிரச்சனை கள் உருவாகுவதாக புகார்கள் எழுகின்ற இந்த சமயத்தில், அதில் நடிப்பவர்களின் குடும்பத்தில் பிரச்சனை என்பதை காணும் போது வினை விதைத் தவ(ள்)ன் வினையைத்தான் அறுவடை செய்ய முடியும் என்பது நினைவுக்கு வருகிறது.
"மருத்துவக் கல்லூரி நாகையா? மயிலாடு துறையா?' என்று மல்லுக்கட்டுவது மக்களுக் காக அல்ல, மந்திரி கனவுக்கும், கரன்ஸிக்கும் தான் என்பது கேவலமாக உள்ளது.
________________
வாசகர் கடிதங்கள்!
சமூகப் பணி!
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் குரலுக்கு செவிமடுத்த மா.செ. வேதையன், சாக்கடை அடைப்பை சரிசெய்தது அரசியல் அப் பழுக்கற்ற சமூகப் பணி. இச்செயலை மா.செ. யின் அக்கறையான வார்த்தைகளிலிருந்தும், கழிவுநீரை அப்புறப்படுத்த அவர் மேற் கொண்ட தொழில்நுட்பத்திலிருந்தும் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
-ஆர்.பி.சங்கரன், தர்மபுரி.
அணி திரண்டு...!
நடிகை ரைசா, ஹரீஸ் கல்யாண் போன்றவர்களை டேட்டிங் கூப்பிட்டால் அது கண்டும் காணாத தவறாகவே எண்ணப்படும். ஆனால் இதே "அழைப்பை' ஹரீஸ் வைத்திருந்தால் இந்நேரம்... மீடூ-டாட்டூ என எல்லா டூக்களும் அணிதிரண்டு நாவடக் கத்தை மீறி வசை பாடியிருக்கும்.
-எஸ்.சோலைராஜன், ஜெயங்கொண்டம்