பார்வை -மருத்துவர் ம.கருணாகரன் எம்.டி.

dd

pp

னக்கும், "நக்கீரன்' புலனாய்வு இதழுக்குமான உறவு என்பது, "ஆட்டோ சங்கர்' காலத்திற்கு முந்தையது. செய்திகளின் உண்மைத்தன்மை அறிய, நக்கீரனோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது இன்று காலத்தின் கட்டாயமாக உள்ளது. பிறர் வெளியிடத் தயங்கும் உண்மைகளை வெளியிட்டு, அதனால் பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் சந்தித்து, இன்றும் காரம் குறையாமல் 32 ஆண்டுகள் தாக்குப்பிடித்து பத்திரிகை உலகில் தனக்கென நிலைத்த ஓர் இடத்தை தக்க வைத்துக்கொள்வது என்பது ஆகப்பெரும் சவால்.

201

2019, டிச. 07-10 இதழ்:

தமிழகம், தேசிய மற்றும் அயல்தேச விஷயங்கள், போலி பக்தி, போதை சீரழிவு, போராட்டக்களம், நடிகர்களின் நடிப்பு, வெங்காய விவகாரம் என பல்சுவையுடனும், புலனாய்வுப் பின்னணியுடனும் வெளியாகி இருக்கிறது.

ஜனநாயகத்தில் யார் ஏமாளி, யார் கோமாளி, யார் திறமைசாலி என்பதை மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத வகையில் சொல்லியிருக்கும் மாவலியின் பதில் எப்போதுமே "நச்'. ஈழத்தமிழர்களின் மீது போர் நிகழ்ந்தபோது தொடர்ந்து கட்டுரை வெளியிட்ட "நக்கீரன்', இப்போதும் "கோத்தபயவின் கொலைவெறி' என்று கட்டுரை வெளியிட முடிகிறதெனில், உலகத் தமிழர்கள் மீது "நக்கீரன்' கொண்டிருக்கும் பற்று மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பவர் ஃபைட்டை பார்த்தால், அடுத்த தேர்தலுக்குள், இலை கட்சியில் மீண்டும் ஒரு தர்மயுத்தம் வெடிக்கும் என புரிந்துகொள்ள முடிகிறது.

இளைய தலைமுறையினரிடம் நல்லதைச் செய்ய, தீயதை வெறுக்க, நேர்மறை சிந்தனையை விதைக்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் உள்ள நல்லவர்களை அறிமுகப்படுத்தவும் இதழில் ஒரு பக்கத்தை ஒதுக்க வேண்டும்.

பழ.கருப்பையா அவர்களின் "அடுத்த கட்டம்' தொடர், அவருடைய வழக்கமான பாணி கட்டுரைதான் என்றாலும்... தாந்திரிகம், பாரதி மேற்கோள், வெறும் முதுகு ஆகியவற்றைக் குறிப்பிட்ட விதம் சிந்திக்க வைத்தது.

___________

வாசகர் கடிதங்கள்!

நிமிர்ந்தெரியும் கண்ணீர்!

சுவரே சித்திரங்களின் கல்லறையாகிவிட்டது. உயிர் குடித்த ஒவ்வொரு கல்லும் மனம் கரைந்து, தவறுக்குப் பாவமன் னிப்பு கோருகிறது. கவிஞர் கபிலனின் கவிதைக் கண்ணீர், நடூர் துன்பியலுக்காக தீண்டாமை வல்லாதிக்கத்தின் மார்பைத் தட்டி, தீ என நிமிர்ந்து எரிகிறது.

-சேரன்குலத்தான், பெரம்பலூர்.

தி.மு.க. யள் அ.தி.மு.க!

தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களை சீட்டுக்கட்டு போல கலைத்துப் போடுவது அல்லது அத்திட்டங்களின் திறப்புவிழாவில் தங்கள் நாமத்தைச் சூட்டிக்கொள் வது... இப்படியான தட்டிப் பறிக் கும் உழைப்பு மீறல்கள் அ.தி. மு.க.வுக்கு வழக்கமான ஒரு ஜோலிதான். அந்தவகையில், நீலகிரி மருத்துவக் கல்லூரி விவகாரத் திலும் அதுபோல் நடந்துவிடாமல் இருக்கவேண்டும்.

-எஸ்.பி.முரளி, குன்னூர்.

nkn141219
இதையும் படியுங்கள்
Subscribe