hh

க்கீரனுடனான எனது உறவு அந்த இதழ் உதயமான நாட்களிலிருந்தே தொடர்ந்து வருகிறது. மற்ற இதழ்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது "நக்கீரன்' தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்ட ஓர் உண்மை இதழ். நாட்டில் நடைபெறுகின்ற ஊழல் கள், அவலங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் ஆகியவற்றின் பின்னணியில் ரவுடிகள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் என யாராக இருந்தாலும் துணிவோடு அவர்களின் முகத்திரையை கிழித்து மக்க ளிடம் முதலில் கொண்டுபோய் சேர்க்கும் வல்லமை நக்கீர னுக்கு மட்டுமே உண்டு.

2019, நவ.30-டிச.03 இதழ்:

"மீண்டும் மீண்டும் காம லீலை! மறுபடியும் கைதாகும் நித்தி?' இவரின் அயோக்கிய லீலைகளை "நக்கீரன்' பலமுறை தோலுரித்துக் காட்டினாலும் ஒரு கூட்டம் இன்னமும் பக்தியுடன் இவரை பின்பற்றுகிறது. சில அரசியல்வாதிகள் கூட சப்போர்ட் செய்கிறார்கள்... என்னத்த சொல்ல?

Advertisment

"மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி' பற்றிய மாவலி பதில், இன்றைய ஆட்சியாளர்களின் நிலை பற்றிய நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் அயலார்க்குத்தான் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்கும். கிடைக்கும் கமிஷனுக்காக தரமற்ற வேலை செய்யும் காண்ட்ராக்டர்களுடன் கைகோர்த்துப் போகும் ஊழல் பெருச்சாளிகள், அதிகாரிகளாக... அரசியல்வாதிகளாக இருக்கும்வரை பாதாளச் சாக்கடை ஊழல் மயிலாடுதுறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் தலைவிரித்தாடும். இதனால் பொதுமக்களுக்குத்தான் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.

ஊழல்களை வெளியிடும் உங்கள் பணி தொடரட்டும். சிறந்த அரசியல்வாதிகளை மக்களிடம் அடையாளம் காட்டி நல்லோரை மக்கள் தேர்ந்தெடுக்க உதவுங்கள்.

வாசகர் கடிதங்கள்!

Advertisment

அரசியல் சேறு!

மக்கள் நல்லெண்ணத்துடன் தாமாக முன்வந்து நாச்சியார்குளத்தை தூர் வாருவதிலும்கூட அரசியல்தனம் சேறு பூசி விளையாடுகிறது. இதில் தி.மு.க.வின் வசூல் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன், தன்னை முன்னிலைப்படுத்தி குளத்தில் போர்டு வைப்பது கடைந்தெடுத்த...?

-களி.சிவராமன், நரசிங்கபுரம்.

வலிந்து வரவேற்பு!

இந்தியா, இலங்கை அதிபருக்கு வாலண்ட்ரியாக வரவேற்பு வளையம் வைப்பதில் பலவித விமர்சனங்கள் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர் அழைக்கப்பட்டது, இந்தியாவின் பொருளாதார நலன் சார்ந்த திட்டங்களுக் காகத்தான் என்கிறபோது மகிழ்ச்சிதான்.

-கு.கிருத்திகா, நாகை.