நான் கடந்த சில ஆண்டுகளாக "நக்கீரன்' இதழின் வாசகனாக உள்ளேன். தமிழ்நாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தொலைக்காட்சியோ, செய்தித்தாள்களோ மற்ற இணைய சேவைகளோ தேவையில்லை, நக்கீரன் இதழ் மட்டுமே போதும் அந்த அளவிற்கு செய்திகள் ‡எடுத்துரைக்கப்படுகின்றன. அரசியல், சினிமா, பொருளாதாரம், கலை, வாழ்வியல் நெறிகள், சமூகம் என அனைத்தும் உள்ளடக்கிய இதழாக வரும் தமிழகத்தின் ஒரே இதழ் "நக்கீரன்.'
அப்பல்லோ முதல் ஆளுநர் மாளிகை வரை அசைத்துப் பார்க்கும் இதழ். கூவத்தூர் ஏலம், பொள்ளாச்சி கோரம், குட்கா ஊழல், அரசியல் கட்சிகளின் கட்சி தாவல்... என அடுக்கடுக்காக உண்மைகளை தோலுரிக்கும் ஒரே புலனாய்வுப் பத்திரிகை "நக்கீரன்' மட்டுமே. மக்களுக்கு உண்மையையும், தெளிவையும் எடுத்துரைக்க பல்வேறு இன்னல்பட்டு இன்றுவரை "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்பதற்கு உயிரூட்டம் கொடுத்து வருகிறது "நக்கீரன்.'
2019, நவம்பர் 27-29 இதழ்:
"சசி என்ட்ரி! பன்னீருக்கு வேட்டு வைக்கும் எடப்பாடி!', "பா.ஜ.க. ஸ்கெட்ச்! அ.தி.மு.க.வை தாக்கும் மாடலிங் புயல்' போன்ற கட்டுரைகள் அரசியல் சூழ்ச்சியின் உச்சம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன. இதுபோன்ற செய்திகளை முன்கூட்டியே சொல்லுவதிலும் "நக்கீரன்' முதலிடம் வகிக்கிறது.
இந்த சேவை பல ஆண்டுகள் தொடர, பாமர மக்களும் தெளிவுபெற, என்றும் உன் புகழ் விண்ணைத் தொட மனமார வாழ்த்துகிறேன்.
___________
வாசகர் கடிதங்கள்!
ரஜினிக்கு உபதேசம்!
எம்.பி. தேர்தல் நேரத்தில், தேர்தல் வியூக குழுக்களின் அனுபவம் பெற்றவர் ம.நீ.ம. கமல் . அந்த வகையில், தன் நண்பன் ரஜினிக்கு, பிரசாந்த் கிஷோரின் எடுபடாத அரசியல் ஜோதிடத்தை உபதேசம் செய்வதற்காக கமலை நாம் பாராட்டலாம்.
-எஸ்.நந்தினி, திருநெல்வேலி.
"கேரக்டர்'!
கலைஞானம் சார், தன் பழைய கால சினிமா அனுபவங்களை "கேரக்டர்' பெயரில் கடை விரித்தார். எல்லோரும் கொள்வாராக இருந்தோம். ஆனால் சமீபமாக வெளிவந்திருக்கும் "உடன்கட்டை ஏறிய புலவர்' வரை எல்லாமே ஒவ்வொருவருக்குள்ளும் அரைபட்ட ஒன்றுதான். எனினும் தொடரின் எழுத்து நடை கற்கண்டாகவே இனிக்கிறது.
-பி.கே.சேகர், தேவகோட்டை.