pp

க்மார்க் உண்மை! ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாவட்டம்

இந்திய பத்திரிகை உலக வரலாற்றில் முதன்முதலாக சந்தன வீரப்பனின் உண்மை முகம் தாங்கிய அட்டைப் படத்துடன் "நக்கீரன்' வந்ததிலிருந்து இன்று வரை தொடர்கிறது நக்கீரனுக்கும் எனக்குமிடையிலான பந்தம். அதற்கடுத்து ஆட்டோ சங்கரின் "மரண வாக்குமூலம்' வந்துச்சு பாருங்க... அதிகார வர்க்கம், அதிகாரிகள் வர்க்கம், குறிப்பா போலீஸ் வர்க்கம் ரொம்பவே கதிகலங்கிவிட்டது. அதனால் அவசர அவசரமாக ஆட்டோ சங்கரை தூக்கில் போட்டார்கள்.

பிரேமானந்தா, ஜக்கி வாசுதேவ், காஞ்சி சங்கராச்சாரி, நித்தியானந்தா, காமச் சேட்டை பாதிரியார்கள் என அனைத்து மத பித்தலாட்டங் களையும் அம்பலத்திற்குக் கொண்டுவந்து மக்களை உஷார்படுத்திய நற்பணியைச் செய்த பெருமை நக்கீரனுக்கே உண்டு. சமீபத்தில்கூட பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை நக்கீரனும் யு டியூப்பில் நக்கீரன் ஆசிரியரும் வெட்ட வெளிச்சமாக்காமல் விட்டிருந்தால், அந்த கொடூரத்திற்கு சமாதி கட்டியிருப்பார்கள்.

Advertisment

2019 நவ.23-26 இதழ்:

"ஆட்டம் குளோஸ்!' இந்தியாவைப் பொறுத்தவரை நித்தியின் ஆட்டம் குளோஸ் என்றால், வெளிநாடுகளில் ஆட்டம் தொடரத்தான் போகிறதா? கோவிலோ, சர்ச்சோ, மசூதியோ மன அமைதி வேண்டித்தான் மக்கள் செல்கிறார்கள். ஆனால் அங்கும் அடாவடி என்றால் எங்கு தான் போவார்கள். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் தர்ஷனின் அடாவடியைத் தான் சொல்கிறேன்.

கேரக்டரில் சரத் குமாரை கம்பீரமாக வர்ணித்த கலைஞானம், கரெக்டான இடத்தில் ஒரு பஞ்ச் விட்டிருக்கிறார். மலைக் குறவர் குடும்பத்திற்கு ஏற் பட்ட கதியை நினைத்தால், அடக்கொடுமையே இந்த நூற்றாண்டில் இப்படியுமா? என வேதனைப்பட்டேன். "இணைப்பு! ரஜினி,—கமல் வெயிட்டிங்!' சரி... நாமளும் தான் வெயிட்பண்ணிப் பார்ப்போமே. ஐ.ஐ.டி.யின் ‘மகத்தான’ பணி குறித்து பேராசிரியர் வசந்தா கந்தசாமி சொல்லியிருப்பது அக்மார்க் உண்மை.

Advertisment

____________

வாசகர் கடிதங்கள்!

"ஆமை' அரசு!

தென்பெண்ணையில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாகியிருக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்பட்டதன் விளைவு இது. அரசைக் கண்டிக்கும் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்வது, நீர்மேல் எழுத்துதான்.

-ஆ.திருநாவுக்கரசு, பெரம்பலூர்.

சஸ்பென்ஸில் மேயர்!

மதுரை மேயர் தேர்தலன்று அதிகாரத்தின் துஷ்பிரயோக ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருக்க வேண்டும். அப்படி வாக்களிப்பு நடக்கும்பட்சத்தில் ஓட்டு எண்ணிக்கை நாள்வரை, எல்லா கட்சிகளிலும் மேயர் வெற்றி குறித்த சலசலப்பும் படபடப்பும் கலந்த ஒரு சஸ்பென்ஸ் நீடித்துக் கொண்டே இருக்கும்.

-கே.செந்தாமரை, கரூர்.