Skip to main content

பார்வை! -ரெ.பழனி

parvai

செய்திகளை நம்பகத்தன்மையோடு விரைவாக வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் தனக்கு இணை யாருமில்லை என்கிற தோரணை என்றுமே நக்கீரனுக்கு உண்டு. பிரச்சனையை பிரசங்கம் செய்யாமல் காலமும் காரணமும் அறிந்து தீர்வுக்குரிய தன்மையை காண வைக்கும் விதமாக செய்திகளை கொடுப்பதில் தனியிடம் பிடித்துக் கொண்ட பெருமிதம் நக்கீரனுக்கு இருக்கிறது.

நக்கீரன் வளர்ந்துகொண்டிருக்கும்போதும் வளர்ந்த போதும், பல்வேறு சூழல்களை சமாளித்து இடைஞ்சல்களையும் தகர்த்து வளர்ந்த பெருமையை தன்னகத்தே கொண்டது. அதனையே வலிமையாக உருவகப்படுத்தி ஊக்கத்துடன் பீடுநடை போடுகிறது தன் தடத்தில் இன்றும்.

கிராமப்புற பகுதி இளசுகளையும் விசயம் அறிந்தவர்களையும் அரசியல் இதழை படிக்க வைத்ததில் நக்கீரனின் பங்கு வெகு சிறப்பானது.

2018, ஜூன் 23-26 இதழ்:

ராங்-காலில் போடும் சரவெடிகள் படபட வென அதிரும், அதில் இந்த இதழும் விதிவிலக் கல்ல. இவரும் அரசியல் களத்தில் குதிப்பாரோ என எண்ண வைத்தது இயக்குநர் எஸ்.ஏ.சி. பேட்டி. ஈர்ப்புக்குரிய சுவாரசியத்துடன் இருப்பதோடு பத்திரப்படுத்திக்கொள்ளும் விதமாக இருக்கிறது ’’மாவலி பதில்கள்/பதிவுகள்.

சின்னகுத்தூசி நினைவு விழாவில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவரை நினைவுகூர்ந்து பேசியதில் சின்னகுத்தூசியின் புலமையையும் திறமையையும் புலப்படுத்தியது. டூரிங் டாக்கீஸ், மிட்நைட் மசாலா, வலைவீச்சு, திண்ணைச் கச்சேரி மகளிர் அணி, ஆங்காங்கே பக்கங்களின் மேலும் கீழும் வரும் வரிச் செய்திகள் என அணிவகுக்கும் இவைகள் பரபரப்புக்கு இடையே விறுவிறுப்பாக இருக்கின்றன.

வாசகர் கடிதங்கள்!

வளையும் சட்டம்!

கருத்துரிமை சுதந்திரம் இருக்கிறது என்பதற் காக அநாகரிகமாய் பேசக்கூடாது என்பதற்கேற்ப பத்திரி கையாளர் விஷயத்தில் சூடுபட்டிருக்கிறார் "வாய்க் கொழுப்பு' எஸ்.வீ.சேகர். தலைமைச் செயலாளரது, பதவிக் கனத்தின் அழுத்தத்திற்கு இணங்குகின்றன அரசும், சட்டமும்! தற்போது தராசு அவசரகதியில் தாழ்ந்திருக்கின்றன.

-தே.சட்டநாதன், எடைக்கல்.

ஆப்பிள் நிற காஷ்மீர்!

காஷ்மீரின் தொடக்கம் முதலே பா.ஜ.க.வுக்கும் ம.ஜ.க.வுக்குமான அரசியல் சீதோஷ்ணம் என்பது, ஆட்சிக் கலைப்பு என்கிற பனிக்குடம் உடைவதற் கான போராட்டம்தான். அங்கே ஆளுநர் ஆட்சி தொடங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு படையினருக் கும் பிரிவினைவாதிகளுக்குமான கலவரங்கள் இனி, நிமிடத்துக்கு நிமிடம் வெடிக்கும். வன்முறைக் கலவரங்கள் இரட்டிப்பாகி, வருங்காலங்களில் காஷ்மீரத்து ஆப்பிள் பழங்களிலும் மென்மேலும் ரத்தம் சிவப்பேறியிருக்கும்.

-எஸ். ஆலடரசன், திருவாரூர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்