Advertisment

பார்வை!-ம.அஜிஸ்

pp

pp

நான் மதுரை சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே நக்கீரனின் தீவிர வாசகன். வீரப்பன், ஆட்டோ சங்கர், பிரேமானந்தா, நித்யானந்தா இவர்களை இவ்வுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய எங்கள் மண்ணின் மைந்தர் அண்ணன் நக்கீரன்கோபால் அவர்களுக்கு ராயல் சல்யூட். அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பது நக்கீரன் பத்திரிகை மட்டுமே என்பதில் மகிழ்ச்சி அடை கிறேன். ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை அவரை பற்

pp

நான் மதுரை சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே நக்கீரனின் தீவிர வாசகன். வீரப்பன், ஆட்டோ சங்கர், பிரேமானந்தா, நித்யானந்தா இவர்களை இவ்வுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய எங்கள் மண்ணின் மைந்தர் அண்ணன் நக்கீரன்கோபால் அவர்களுக்கு ராயல் சல்யூட். அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பது நக்கீரன் பத்திரிகை மட்டுமே என்பதில் மகிழ்ச்சி அடை கிறேன். ஜெயலலிதாவின் கடைசி மூச்சு வரை அவரை பற்றிய செய்திகளை துணிவுடன் எழுதிய ஒரே பத்திரிகை "நக்கீரன்' மட்டுமே. நீதிமன்றம் மூலம் பத்திரிகை சுதந்திரத் திற்காக பல நல்ல தீர்ப்புகளை வாங்கித் தந்த பெருமை நக்கீர னுக்கு மட்டுமே உரித்தானது.

Advertisment

2019, நவ. 20-22 இதழ்:

இலங்கை தேர்தல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முடிவு, பாத்திமா தந்தை மற்றும் உறவினர்கள் பேட்டிகள் என இந்த இதழ் நக்கீரன், அதிகார வர்க்கத்திற்கு எதிரான எங்கள் மனோநிலையின் பிரதிபலிப் பாகவே இருந்தது. எங்கள் மண்ணின் பெருமைக்கு மகுடம் வைத்தாற் போல் கலைஞானம் அவர்களின் வேலுநாச்சியார் பதிவுக்கு ஒரு சிறந்த நன்றியை சிவகங்கை மக்கள் சார்பாக தங்களுக்கு காணிக்கை ஆக்குவதில் பெரு மிதம் கொள்கிறோம்.

Advertisment

ரஜினி-கமல் அதிசயம் நடந்தால் அதுவும் ஒரு மாற்றமே. தி.மு.க.வை அதிர வைத்த திருமா செய்தி சுவாரஸ்யம். இளம் பெண்களை மனநோயாளி களாக்கிச் சிதைக்கும் ஏர்வாடிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ராஜீவ் கொலை சிறைவாசி களின் பரோல் விஷயத்தில் சிறைத்துறை மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது. கால் இழந்த ராஜேஸ்வரியின் செய்தி மனதை பதைபதைக்க வைத்தது.

_____________

வாசகர் கடிதங்கள்!

சிகரெட்டுக்குள் சீக்ரெட்!

தங்கம் கடத்தும் "குருவி'களுக்கு திருச்சி ஏர்போர்ட் இப்போது ரெட் அலர்ட் பிளேஸாகிவிட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளை வசமாக ஏமாற்று வதாக நினைத்த சுங்கத்துறை யினர் மற்றும் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஆகியோர்... சிகரெட்டுக்குள் தங்கம் கடத்திய சீக்ரெட் குருவி களோடு பிடிபட்டிருப்பது அய்யோ பாவம்.

-லயன்ஸ் ஆர்.மதன், லால்குடி.

கருத்தின் பொருத்தம்!

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் ஊழலுக்குள் மஞ்சள் குளிக்கும் கட்சிகளாகி விட்டன என்கிற பழ.கருப் பையா, இவற்றுக்கு மாற்றாக ஓர் அறிவியக்கம் வேண்டும் என்கிறார். இவரது கருத்து, களத்தில் இருக்கும் இதர கட்சிகளுக்கும் பொருந்தும் தானே?

-ஆ.தீனதயாளன், திருப்பூர்.

nkn291119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe