"நக்கீரன்' இதழின் சிறப்பே அதன் வாசகர்கள்தான். எழுத்துக் கூட்டி மிகவும் பொறுமையாக படிக்கின்ற சாமா னியர்களிலிருந்து, அரசு நிர்வாகங்களில் உயர் பதவி களை வகிப்பவர்கள் வரை, "நக்கீரன்' வாசகர்களாக இருப்பதை நானறிவேன். பெயருக்கு ஏற்றாற்போல் இதழ்தோறும் வெளியிடும் செய்திகளிலும் தனித்தே நிற்கிறது "நக்கீரன்.'
2019 நவ. 02-05 இதழ்:
உதயநிதிக்குத் தரப்படும் அதிக முக்கியத்துவம் இன் னொரு பகுதியினருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது’ என்றும், ‘விளக்கம் மட்டும் கேட்டுக்கிட்டே இருப்பாரு’ என்று ராகுல் மீதான காங்கிரஸ் கட்சியினரின் அதிருப்தி குறித்தும், நிதி வரன்முறைக்கு மாறாக சுஜித் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் தந்தார் என வருமான வரித் துறைக்கு பா.ஜ.க. புகார் அனுப் பியதை ராங் காலில் பேசுவ தெல்லாம் ‘"பொளேர்'’ ரகம். ஆழ்துளைக் கிணறு ஆழத்திற்கு புதைந்திருக்கும் மர்மங்கள் ஒவ்வொன்றை யும் தோண்டி யெடுத்து வெளிக்கொண்டு வந்திருக்கிறது அட்டைப்படக் கட்டுரை. இருவரிடமும் இருந்த இரக்க சுபாவமே காதலை வளர்த்தது என்று கேரக்டர் தொடரில் என்.எஸ்.கே. மதுரம் ஜோடி குறித்து கலைஞானம் சிலாகித்திருப்பது கவிதை. ‘
"உன் ஊரில் நீ தவறானவள் என்று போஸ்டர் ஒட்டுவேன்'’ என்று எஸ்.ஐ. விவேக் ரவி, சுபஸ்ரீயை மிரட்டியதோடு, போலீஸ் புத்தியையும் காட்டியதை "காக்கி லீலை' என உரித்துவிட்டீர்கள். கல்வித்துறை... தீபாவளி போனஸ் செய்தியைப் படித்தபோது, நான் பணியாற்றும் துறையாயிற்றே என்று அதிர்ந்து போனேன். பொதுத்தேர்தல் க்ளைமேட் இடைத்தேர்தலில் இருக்காது என்று திருநாவுக்கரசர் உண்மை பகன்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்க மறுத்தார்கள் என்றால், அக்கட்சியின் எதிர்காலம்.. ம்ஹும். "பிகில் சத்தம் எப்படி?'’ “"கேட்கல... இன்னும் சத்தமா'! என ஊதி... உண்மை நிலவரத்தைச் சொல்லி யிருக்கிறார் மாவலி. டூரிங் டாக்கீஸ் பக்கத்தைப் படிப்பதும் ஸாரி... அமலாபால் படத்தைப் பார்ப்பதும்கூட "ரிஸ்க்'’ தான்!
___________
வாசகர் கடிதங்கள்!
அணு உலை!
"கூடன்குளம் அணுஉலையின் கம்ப்யூட்டரில் 'உ பதஆஈஃ' வைரஸ்... யாரும் அவ்வளவாக கவனிக்காத, ஆனால் முக்கியத் துவமான செய்தி. இந்தச் சம்பவத்தை மறைப்பதற்கு முயலாமல் நிர்வாகம் புதிய மென்பொருள் கட்டமைப்புகளை பயன்படுத்த வேண்டும்.
-வே.ராஜசேகரன், சேந்தமங்கலம்.
உயிர்க் கவிதை!
"ஆழ்துளை' சுஜித் மரணம் குறித்த கவிஞர் ஈரோடு தமிழன்பனின் படிமக் கவிதை, உயிரின் கசிவு. ஒவ்வொரு வரியிலும் சிறுவனின் ஆத்மா அலைபாய்ந்து, நம் "இயலாமையை' சம்மட்டியால் அடிப்பது போல் ஒரு பூதாகர உணர்வு காட்சியாய் விரிகிறது.
-பி.தேவநேசன், தூத்துக்குடி.