பார்வை!-த.செங்கோடன்

pp

pp

க்கீரனின் தொடக்க காலத்தில் இருந்து வாசகனாக இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு எதிராக எங்கே அநீதிகள் நடந்தாலும் அந்த இடத்தில் செங்கொடி தோழர்கள் நிற்பது போல "நக்கீரன்' களத்தில் நிற்கும். அதனால் எனக்கு நக்கீரனைப் பிடிக்கும். உண்மைகளை வெளிச் சத்திற்கு கொண்டு வருவதால் எத்தனை எத்தனை வழக்குகள். அத்தனை வழக்குகளையும் சமா ளித்து, தான் கொண்ட கொள் கைப் ப

pp

க்கீரனின் தொடக்க காலத்தில் இருந்து வாசகனாக இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு எதிராக எங்கே அநீதிகள் நடந்தாலும் அந்த இடத்தில் செங்கொடி தோழர்கள் நிற்பது போல "நக்கீரன்' களத்தில் நிற்கும். அதனால் எனக்கு நக்கீரனைப் பிடிக்கும். உண்மைகளை வெளிச் சத்திற்கு கொண்டு வருவதால் எத்தனை எத்தனை வழக்குகள். அத்தனை வழக்குகளையும் சமா ளித்து, தான் கொண்ட கொள் கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது "நக்கீரன்'. ஒட்டுமொத்த நக்கீரன் குடும்ப மும் மக்கள் பணி செய்கிறது.

2019 அக். 26-29 இதழ்:

"பள்ளிகளில் மதவெறி! தமிழக அபாயம்' என்ற அட்டைப்படக் கட்டுரை ஆதாரத்துடன் இந்த அரசாங்கத்தின் முகத்திரை யை கிழித்துவிட்டது. இடைத்தேர்தல் களத்தில் உள்ள பாரபட்சம், உள்குத்துகளை விளக்கமாக கொடுத்திருந்தது. அறிவுக்களஞ்சியமாக இருந்த மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் கேட்பாரற்றுக் கிடப்பதை படங்களுடன் வெளியிட்டதை நினைத்து வேதனைதான் படவேண்டும்.

"போலீசுக்கு திருடர்கள் தரும் தீபாவளி போனஸ்' செய்தி சுவாரஸ்யமானது. சிக்னலில் சின்னச் சின்ன செய்திகளாக இருந்தாலும் நல்ல செய்திகளாக உள்ளது. "ஆமை வேகத்தில் அணைக்கட்டு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசு!' மக்கள் பணத்தை மக்களுக்கு செலவு செய்யாமல் இப்படி வீணாக்குவதை அதிகாரிகள் எப்பதான் கண்டுகொள்வார்களோ? இன்றைய அரசியலை "ராங்-கால்' புட்டு புட்டு வைத்திருக்கிறது. "வலை வீச்சு' பகுதி அனைவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

______________

வாசகர் கடிதங்கள்!

மொழியின் அக்கறை!

திராவிட மக்கள் தங்கள் தாய்மொழியின் உயிர்ப்புக்கு உத்தரவாதமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். வடநாட்டவர்களின் மொழி திணிப்பில் நாம் சுயம் இழந்துவிடக்கூடாது. நீங்க சொன்ன மாதிரி, திராவிட பல்கலை விழாவில் ஆந்திர எம்.பி.யின் அசத்தல் பேச்சு, மொழி மீதான அதீத அக்கறையை வெளிப்படுத்துகிறது.

-எம்.இளங்கோவன், வாழப்பாடி.

காமத்தின் கதை!

காமம் தன் ஆசையை தீர்த்துக் கொள்வதில் வெட்கம் அறியாது. இதற்கு டூரிங் டாக்கீஸில் வெளியான "ஆ'டாகூட கதை ஒரு நேரடி உதாரணம்.

-கே.சுபாஷ், தஞ்சை.

nkn051119
இதையும் படியுங்கள்
Subscribe