பீஸ் வாங்காத வக்கீல் சமூக ஆர்வலர் நீலகிரி.
கண் மூடி யோசிக்கிறேன். நக்கீரனில் நான் வாசித்த முக்கிய பக்கங்களை ஒரு கூண்டுக் கிளி சீட் எடுப்பதுபோல என் மனக்கூண்டிலிருந்து காலக்கிளி எடுத்துப் போடுகிறது .
ஆட்டோ சங்கர் வாக்குமூலம் தொடங்கி, நூல் பிடிப்பதுபோல அது வீரப்பனை பிடித்து, சாமியார்களை வளைத்து, இன்னும் நீண்டுகொண்டே இருக்கும் தூரங்களில் நக்கீரனும், நக்கீரன் ஆசிரியரின் கால்களும் பலமாய் காயமுற்றவை.
வலை

வலையொளிக்குள் நான் நுழையும் போதெல்லாம் நக்கீரன் ஆசிரியரின் சமூக அவலங்களை எடுத்துச்சொல்லும் காணொளிகள் ஏதேனும் புதிதாய் வந்திருக்கின்றனவா? எனத் தேடிப் பார்த்தே வேறு காணொளிகளுக்குள் செல்கிறேன் .
பெண்களை தின்னும் பொள்ளாச்சி காமவெறியர்களை கண்டறிந்து, அவர்களின் முகங்களை தோலுரித்து, பெண்களுக் காக பீஸ் வாங்காத வக்கீலாய் என்றுமே போராட... நக்கீரனால் மட்டுமே முடியும் என்பதை எந்தக் கூண்டில் வேண்டுமானாலும் ஏறி நான் சாட்சியம் அளிக்கவும் தயாராயிருக்கிறேன் .
2019, அக். 19-22 இதழ்:
அட்டைப்படமே அசத்தல். திருச்சி லலிதா ஜுவல்லரி யின் நகைத்திருடன், நடிகைக்கு நகை கொடுத்தான் எனச் சொல்லும்போதே அந்த நடிகை யார் என்பதை அறிந்துகொள்ள இளவட்டங்கள் துடிக்கும். அதை அறிந்துகொள்ள... பிளாக் அண்ட் ஒயிட் கால நடிகையின் கதாபாத்திரத்தை உள்வாங்கிய புதிய நடிகை என்பதை எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதை பார்த்து வியந்துபோனேன்.
ஷாம்பெயின் பாட்டிலை திறக்கத் தெரியாமல் புரவியின் கண் பறிபோனது பாவப்பட வைக்கிறது.
"வெண்ணை திரண்டு வரும்போது பானையை உடைத்த சீமான்' என திருச்சி வேலுச்சாமி 7 பேருக்கான மனநிலையோடு, ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வோடு உண்மையாக பதறியிருக்கிறார்.
சாதிவெறி அரசியலில் "ஆளான பொண்ணுக்கு சாலையில் சடங்கு...' என்கிற கட்டுரை மனதை பாதித்தது.
__________
வாசகர் கடிதங்கள்!
ஜக்கியின் பகையாளி!
கல்கி ஆசிரம ரெய்டுக்குப் பின்னால் ஜக்கி வாசுதேவ் இருக்காரா? சரிதான்... அப்ப, துறவிகளுக்குப் பகையுணர்ச்சி கூடாதுனு வேதங்கள் சொல் வதையெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் சொலவடையாதான் எடுத்துக்கணும்போல.
-ஆர்.பிரபாகரன், ஆத்தூர்.
சுவாரசிய பேச்சு!
"...ச்சீய் பேச்சு' படிக்கப் படிக்க ரொம்ப சுவாரசியமாப் போச்சு. அதிலும் ஹிர்திக் ரோஷன் சங்கதியில "பொலிகாளை' கமெண்ட் வருதே... ஆர்.டி.எக்ஸுக்கு ரொம்பத்தான் குசும்பு.
-எஸ்.பி.காயத்ரி, திருப்பூர்.