எதையும் யாருக்காகவும் வளைந்து கொடுக்காமல் தனது நெற்றிக்கண் பார் வையால் பார்க்கும் விதமே தனி. வாரம் நாட்டின் உச்சஅரசியல்வாதியும் நாட்டின் பிரதமருமான மோடியே ஆனா லும் தன் பாணியை மாற்றிக்கொள்ளாத ஒரே புலனாய்வு இதழ் இந்தியாவிலேயே நக்கீரனாகத்தான் இருக்கும். பொதுவாக நக்கீரன் என்றாலே தப்பு செய்கிறவர்களுக்கு சிம்மசொப்பனமாக, மக்களின் பக்கம் எப்போதும் அரணாக இருப்பது எங்களைப் போன்றோர்களுக்கு நிம்மதியை கொடுக் கிறது..
2019, அக்.16-18 இதழ்:
அனைத்து பத்திரிகைகளும் அவர் தூய்மை
எதையும் யாருக்காகவும் வளைந்து கொடுக்காமல் தனது நெற்றிக்கண் பார் வையால் பார்க்கும் விதமே தனி. வாரம் நாட்டின் உச்சஅரசியல்வாதியும் நாட்டின் பிரதமருமான மோடியே ஆனா லும் தன் பாணியை மாற்றிக்கொள்ளாத ஒரே புலனாய்வு இதழ் இந்தியாவிலேயே நக்கீரனாகத்தான் இருக்கும். பொதுவாக நக்கீரன் என்றாலே தப்பு செய்கிறவர்களுக்கு சிம்மசொப்பனமாக, மக்களின் பக்கம் எப்போதும் அரணாக இருப்பது எங்களைப் போன்றோர்களுக்கு நிம்மதியை கொடுக் கிறது..
2019, அக்.16-18 இதழ்:
அனைத்து பத்திரிகைகளும் அவர் தூய்மைப்படுத்தியதாக எழுதியபோது "ஸ்டார்ட் கேமரா சூப்பர் ஆக்ஷன்!' என்று பட்டவர்த்தனமாக அட்டையில் போட்ட தைரியம் வேறு பத்திரிகைக்கு வருமா என்று தெரியவில்லை. நடப்பு அரசியலை யும் நடக்கப்போற அரசியலையும் புல னாய்ந்து சொல்வதில் நக்கீரனை விட்டால் வேறு நாதியில்லை. எப்பவுமே நக்கீரன் என்றாலே ஆளும் தரப்பைமட்டும் குறை சொல்லும் என்று ஆளும்தரப்பு அரசியல் வாதிகள் நினைக்கிறார்கள். ஆனால் யார் தப்பு செய்தாலும் தயவுதாட்சணை இல்லா மல் செய்தி வெளியிடுவதற்கு நிறைய உதா ரணம் சொல்லலாம். மதுரை தி.மு.க. மல்லு கட்டை இதற்கு உதாரணமாகச் சொல்ல லாம். "அடுத்த கட்டம்' தொடர் ஒவ்வொரு கட்டமும் பிரமாதம். அரசியலில் அடுத்து என்ன காய் நகர்த்துகிறார்கள், "முதல்வர் வேட்பாளர் அன்புமணி! பா.ஜ.க. ஆஃபர்' ராங்-கால் கணிப்பும் அரசியல் கட்சி களின் அடுத்த கட்டத்தை கட்டம்போட்டு சொல்லும் விதம் சூப்பரோ சூப்பர். கடைசியாக வரும் "வலை வீச்சு' என் னைப் போன்றோர் சமூகவலைத்தளங் களில் பார்க்கவிட் டுப் போயிருந்தா லும் அதில் ஹை லைட்டான மீம்ஸ்ஸை மட்டும் தனியாகத் தருவது அருமை. எவ்வளவுதான் காரசாரமான அரசியல் புலனாய்வு என்று இருந்தாலும் மனசுவிட்டு மீம்ஸை பார்த்தவுடன் சிரிச்சுட்டு மனநிறைவோடுதான் இதழை மூடுகிறோம்.
__________
வாசகர் கடிதங்கள்!
"காந்தி தேசம்'
அஹிம்சை மகான் காந்தி குறித்த பல அரிய தகவல்களைச் சொன்ன "காந்தி தேசம்' முற்றுப் பெற்று விட்டது. அதில் இடம்பெற்ற ஒவ்வொரு கேள்வியும் பதிலும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. காந்திய அரசியலின் பல்வேறு தரவுகளோடு தனது விமர்சன பார்வையையும் அழுந்தப் பதித்திருப்பார் மாவலி. இந்த மினி தொடர், ஆய்வு மாணவர்களுக்கு ஒரு பேரேடாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
-கே.அறிவழகன், திருக்களம்பூர்.
அரசின் கவனத்திற்கு!
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட் டத்தில் விருதுகளால் சாதித்திருக்கிறார் மாணவி கீர்த்தனா. ஒரு தனியார் நிறுவனம் அவரின் திறமை களுக்கு கிரியாஊக்கியாக இருந்து ஊக்குவிக்கிறது. ஆனால் தமிழக அரசு ஏனோ வேடிக்கை பார்க்கிறது. இத்தகைய மனப்போக்கை களைவதுடன், கீர்த்தனா வுக்குப் பொருளாதார உதவி செய்து நாட்டின் பெருமைக்கு அவரை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
-வே.மணி, திருச்சி.