நூறாண்டு கடந்தும்... , மாநில துணைப் பொதுச்செயலாளர், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு, கும்பகோணம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தன வீரப்பனின் விவகாரத்தை வெளிக் கொண்டுவரத் துவங்கிய துணிச்சல், சங்கரமடம் வழியாக, போயஸ் கார்டன் வரையிலும் விட்டு வைக்காமல் விளா சியது. அந்தத் துணிவு நக்கீர னுக்கும் அதன் ஆசிரியர் நக்கீரன் கோபாலுக்கும் அவரது தம்பி களுக்குமே உண்டு.
ஆதிக்க சக்திகள் அன்று தொடங்கிய எதிர்ப்பு இன்று வரை ஓய்ந்து விடவில்லை. அன்று அல்லி ராணியான ஜெயலலிதாவின் ஆட்சியில் நக்கீரன் கோபாலையும், நிர்வாக ஊழியர்களையும் அழித்துவிட வேண்டும் என துடித்த கரங்கள் இன்றுவரை வந்துநிற்கிறது.
மத்தியில் மதத்தின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்வோருக்கும், அவர்களுக்கு அடிப் பொடிகளாக இருக்கும் தமிழக ஆட்சியாளர் களுக்கும் இன்றும், என்றும் சிம்மசொப்பனமாக இருப்பது நக்கீரன்தான். நீதிமன்றங்களும், முற்போக்காளர்களும், எங்களைப் போன்றவர் களும் இருக்கும்வரை நக்கீரனை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது. நூறாண்டு கடந்தும் செல்லும்.
2019, அக். 12-15 இதழ்:
எப்போதுமே நக்கீரனுக்கு ஸ்டைலே அதன் அட்டைப்படம் தான். அட்டைப் படத்தின் மூலமே செய்தியின் தரத்தைக் கூறி விட வேண்டும் என்பதில் முழுக் கவனத்தை செலுத்துவார் ஆசிரியர் நக்கீரன்கோபால். அந்தவகையில் "அலங்காரம் அடாவடி புரட் டிப் போட்ட சீன அதிபர்' செய்தி மற்றும் படங்கள் சூப்பர் டாப். அதில் "இப்படி ஒவ் வொரு நாட்டு தலைவர்களும் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு என்கிற துவக்கம் மிக மிக அருமை.
நக்கீரனில் "ராங்-கால்', "மாவலி பதில்கள்', கலைஞானத்தின் தொடரும், பழ கருப்பையாவின் அரசியல் நையாண்டி தொடரும் படிப்பவர்களை சுண்டியிழுக்கும். இந்த இதழிலும் அப்படித்தான் இருக்கிறது.
நகைக் கொள்ளையன் முருகன் குறித்தான ஒவ்வொரு நிகழ்வையும் நக்கீரன்தான் பல்வேறு கோணங்களிலும் தோலுரித்துக் காட்டியது. முதல்வர் மாவட்டத்திலேயே இப்படியா... என்பதுபோல் "குழந்தைகள் சாப்பாட்டில் வண்டு சாம்பார்' செய்தி இருந்தது.
______________
வாசகர் கடிதங்கள்!
முக்கோண அரசியல்!
சசி -எடியூரப்பா ஆகியோரை இலக்காக வைத்து "சிறையில் ரெய்டு' எனும் ஒரே கல்லில் இரு மாங்காயாக வீழ்த்த நினைத்த மோடியின் குறி தப்பிதம் ஆகிவிட்டது. எடியூரப்பாவின் போக்கு மோடிக்கு தெரிந்தது, மோடியின் வித்தை எடியூரப்பாவுக்குப் புரிந்தது.
-ஆர்.இளவரசன், மன்னார்குடி.
சென்ஸார் அவசியம்!
அமலாபால், ராதிகா ஆப்தே, கியாரா போன்றவர்கள் காமக் கதைகளில் நடிப்பது அவர் களின் தனிமனித சுதந்திரமாக இருக்கலாம்... ஆனா, நெட் ஃபிளிக்ஸில் ரிலீஸாகும் படங்களுக்கு சென்ஸார் கத்திரி அவசியம் அனுமதிக்கப்பட வேண்டும்.
-டி.வசந்தா மணி, வேலூர்.