பார்வை!-க.விநாயகம்

parvai

parvai

மிழர்களின் மனசாட்சி! , அரசியல் தலைமைக்குழு தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருவண்ணாமலை.

கால்நூற்றாண்டுக்கு மேலாக நான் நக்கீரன் வாசகன். நாளிதழ்கள் எப்படி பட்டிதொட்டியெங்கும் செய்திகளை பரப்பியதோ, அதே போல் வாரஇதழ்களில் பட்டிதொட்டி எங்கும் பரவிய இதழ் நக்கீரன் மட்டுமே. தமிழக மக்களின் குரலாக பேசுவது, பேசிவருவது நக்கீரன் மட்டுமே. தமிழக நலன் குறித்தும், தமிழ்நாட்டு அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்தும் அதிக செய்திகளை வெளியிட்ட இதழ் நக்கீரன் என்றா

parvai

மிழர்களின் மனசாட்சி! , அரசியல் தலைமைக்குழு தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருவண்ணாமலை.

கால்நூற்றாண்டுக்கு மேலாக நான் நக்கீரன் வாசகன். நாளிதழ்கள் எப்படி பட்டிதொட்டியெங்கும் செய்திகளை பரப்பியதோ, அதே போல் வாரஇதழ்களில் பட்டிதொட்டி எங்கும் பரவிய இதழ் நக்கீரன் மட்டுமே. தமிழக மக்களின் குரலாக பேசுவது, பேசிவருவது நக்கீரன் மட்டுமே. தமிழக நலன் குறித்தும், தமிழ்நாட்டு அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்தும் அதிக செய்திகளை வெளியிட்ட இதழ் நக்கீரன் என்றால் அது மிகையல்ல.

வீரப்பனை பிடிப்பதாக சொல்லி அதி ரடிப்படை செய்த அட்டூழியம், ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம், ரா.கி.ரங்கராஜ னின் தொடர் கட்டுரைகள், சின்னகுத்தூசியா ரின் அரசியல், பொருளாதார, சமூக கட்டுரைகள், அ.தி.மு.க. அரசு செய்த ஊழலுக்கு எதிரான நக்கீர னின் தொடர் போராட்டங்கள் தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவை. அதனால் கடுமையான அடக்குமுறையை சந்தித்த பத்திரிகையும் நக்கீரன் மட்டுமே. கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக மக்களின் மனசாட்சியாக பேசுவது நக்கீரன் இதழ்தான்.

2019, அக்.9-11 இதழ்:…

நகைக்கொள்ளையனின் "தொழில் தர்மம்' என்கிற தலைப்பில் வந்துள்ள முருகனின் செய்தி முற்றிலும் புதிது. இப்படிப்பட்ட தகவல்களைத் தர நக்கீரனால் மட்டுமே முடியும். "கீழடி தொல்லியல் ஆய்வு' குறித்த சு.வெங்க டேசன் எம்.பி.யின் நேர்காணல் ஆழமானதாக வெளி வந்துள்ளது. "எம்.பி.க்களை புறக்கணிக்கும் அதிகாரிகள்' செய்தி மாநிலம் முழுவதும் நடைபெறுவதுதான். ஆளும்கட்சியின் கைப்பாவைகளாக மாறி அதிகாரிகள் செய்யும் அராஜகத்தை இன்னும் அதிகமாக வெளிப்படுத்த வேண்டும்.

"நெடுஞ்சாலை ஊழல்! சறுக்கிய எடப்பாடி' செய்தி பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அ.தி.மு.க.-அ.ம.மு.க.வுக்கிடையே நடக்கும் மோதலில் தற்போது தினகரன் சிக்கியுள்ளார். சசிகலா வெளிவரும்வரை இப்படிப்பட்ட நாடகங்கள் நடக்கும்.

வாசகர் கடிதங்கள்!

"சிறப்பா'ன பயிற்சி?!

கிருஷ்ணகிரி ஷயத் பாஷா மலையில் வெடிகுண்டு தயாரிப்பும் பயிற்சியும் "சிறப்பா' நடந்திருக்கு. இதுகுறித்து, காவல்துறைக்கு ஒரு துப்பும் கிடைக்கல. இந்த லட் சணத்துல காவல்துறையின் கண்ட்ரோல் ரூமும் அங்கதான் குடியிருக்காம். இனி திரும்பத் திரும்ப தமிழ்நாடு போலீஸை "யார்டு'க்கு நிகரா ஒப்பி டாதீங்க... ப்ளீஸ்!

-பி.கே.சோழராஜன், கும்பகோணம்.

வலைவீச்சில் சிக்கும் மாண்புமிகு!

"ஓ.பி.எஸ்.' என்பதற்கு விளக்கம் சொல்லி புகழ்ந்த செல்லூர் ராஜுவின் பெரு மூளைக்கு ஒரு சிலையே வைக்கலாம். அப்பப்ப ஏதாவது சொல்லி, "வலை வீச்சு'ல வந்து மாட்டிக்கிறதே வேலையாப் போச்சு, நம்ம தெர்மாகோல் புகழ் மாண்புமிகுவுக்கு.

-ஆர்.டி.தனசேகர், தேனி.

nkn181019
இதையும் படியுங்கள்
Subscribe