பல இதழ்கள் மத்தியில் என்னை மிகவும் கவர்ந்தது "நக்கீரன்' வாரமிருமுறை இதழ். செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வந்து விடும். அதுவும், இன்றைய காலகட் டத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் வருவதற்குமுன் சமூக ஊடகங்கள் மூலம் நம் கையிலிருக் கும் செல்லில் வந்து கொட்டுகின்றன செய்திகள். ஆனால், எது உண்மை செய்தி? எது பொய் செய்தி என் பதை ஆதாரங்களுடன் வெளியிடும் புலனாய்வுப் பத்திரிகைகளில் மட் டுமே நம்பிக்கையோடு படிக்கவும் தெரிந்து கொள்ளவும் ம
பல இதழ்கள் மத்தியில் என்னை மிகவும் கவர்ந்தது "நக்கீரன்' வாரமிருமுறை இதழ். செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் வந்து விடும். அதுவும், இன்றைய காலகட் டத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் வருவதற்குமுன் சமூக ஊடகங்கள் மூலம் நம் கையிலிருக் கும் செல்லில் வந்து கொட்டுகின்றன செய்திகள். ஆனால், எது உண்மை செய்தி? எது பொய் செய்தி என் பதை ஆதாரங்களுடன் வெளியிடும் புலனாய்வுப் பத்திரிகைகளில் மட் டுமே நம்பிக்கையோடு படிக்கவும் தெரிந்து கொள்ளவும் முடியும். அதில், என் மனதில் முத லிடத்தை பிடித்திருப் பது "நக்கீரன்'. செய்திக்குப் பின்னால் இருக்கும் உண்மைச் செய்திகளை நக்கீரனில் அறிந்து கொள்ள முடியும். இச்செயல்தான், அச்சு ஊடகத்திற்கான அச்சாணி. ஒரு நிகழ்வின் உண்மையை ஆராய்ந்து பார்த்து அதை மக்களின் பார்வைக்கு கொண்டு செல் வது மட்டும் அல்லாமல் அதில் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரையை கிழிக்கும் "நக்கீரன்' அது யாராயினும் அதை குற்றமாகவே பார்ப்பது மிகவும் சிறப்பு.
சில உண்மைகள் பல பொய்களாக மாறும் நேரங்களில் பல உண்மைகளை உண்மையாகவே சொல்வதில் "நக்கீரன்' இதழை மிஞ்சி வேறு எதுவும் இல்லை என்பது என் உறுதியான கருத்து.
2019, செப். 28-அக்.1 இதழ்:
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து சுபஸ்ரீ பேனர் படுகொலை வரை தொடர் கிறது பெண்களுக்கான எழுத்து யுத்தம். ரஜினியின் குருப்பெயர்ச்சி திட்டம், நீட் ஆள்மாறாட்டம், பணத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு துணை போகும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் கொடூரச் செயல், இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளின் வியூகம் என அனைத்துக் கட்டுரைகளும் அருமை.
செய்திகள் பல இருக்க, அதில் உண்மையாக "நக்கீரன்' இருக்க... அதைப் படிக்கும் எங்களைப் போன்ற வாசகர்கள் இருக்கும்வரை இதேபோல் உங்கள் "மை' பல உண்மைகளை என்றும் எழுத வாழ்த்துகிறேன்.
______________
வாசகர் கடிதங்கள்!
இதுவா யோக்யதை!
திருச்சி கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் அமைச்சர் வளர்மதி, மா.செ.க்களிடையே சீட் பகிர்வு குறித்து ஓர் ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்க. ஆனா அமைச்சரே அதன்படி நடக்காம, இறுதியாக எஞ்சிய சீட்டுகளிலும் தனக்கே முன்னுரிமை என வாதிட்டு, அபகரித்தது நியாயமில்லை. அதிகாரத்தில் இருந்தாலும் பேச்சில் ஒரு யோக்யதை வேண்டாமா?
-ஆ.தண்டபாணி, மருவத்தூர்.
ஆறாக் கோபம்!
முதல்வரின் நெடுஞ்சாலைத் துறையிலேயே கமிஷன் பாளமாய் வெடித்துச் சிரிக்கிறது. அதிகாரிகள் உட்பட அனைவரும் கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது, இல்லீகல்வாதிகளை விடவும் முதல்வரின் மீதே ஆறாக்கோபம் பெருக்கெடுக்கிறது.
-கே.பத்மினி, திருச்சி.