வீரநடைக்கு வணக்கம்! சைவ சித்தாந்த துறைத் தலைவர், சென்னை பல்கலைக்கழகம்.
மக்களுக்கு "வாழும் உரிமை' குறித்து ஊடகம் தெளிவுபடுத்த வேண்டும். பல்வேறு நடைமுறைகளைப் பதிவிடுகின்ற பத்திரிகைகளிலிருந்து வேறுபட்டு, அரசியல் சார்ந்த புரிதல்; மதம் சார்ந்த புரிதல்; சமயம் சார்ந்த புரிதல் என அத்தனைக்கும் பாடுபட்டு, மனிதர்கள் தாங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள உழைத்து வருகிறது "நக்கீரன்' இதழ்.
வாழும் உரிமைகளைத்

வாழும் உரிமைகளைத் தடுத்து வரும் அரசியல்; ஆளும் வர்க்க அதிகார அத்துமீறல்களையும் வக்கிரத்தை யும் அம்பலப்படுத்தி வருவதில் மிக வலிமையான இதழாக வலம் வருகிறது "நக்கீரன்'. வெகுசன; சாதாரண மக்களின் குரலைக் கூக்குரலாகவும் போர்க்குரலாகவும் மாற்றித்தந்து மானுடத்தைச் சாதிக்க வைக்கிற நக்கீரனின் வீர நடைக்கு வணக்கம்.
தமிழகத்தில் சமூக ஊடகங்களில் நடத்தப்படுகின்ற கருத்துப் பரப்புரைகள் அபாயகரமான திரிபுகளாக உள்ளன. இதனைப் புரியவைத்து அரசியல்மீதும் வாழ்க்கையின்மீதும் நம்பிக்கை கொள்ள வைக்கும் நம்பத்தகுந்த ஒரு சிறந்த இதழே "நக்கீரன்'.
2019, செப். 21-24 இதழ்:
இந்த இதழில் வந்த "இந்தீ -மோடியின் டென்ஷன்! அமித்ஷா பல்டி! தி.மு.க.வுக்கு வெற்றி?' எனும் தலைப்பி லான கட்டுரை, கவர்னரை தி.மு.க. கட்சித் தலைமை சந்தித்ததை வைத்து சமூக ஊடகங்களிலும் பத்திரிகை செய்தியாளர்களிடம்கூட தி.மு.க.வை மிரட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்துசெய்ய வைத்ததாக’செய்திகள் திரித்துப் பரப்பப்பட்டன. தி.மு.க. பயப்படுகிறது என்றெல்லாம், தமிழ்மக்களுக்கு உண்மையை மறைத்து பரபரப் பாக்கி நம்பிக்கை ஒழியுமாறு செய்திகள் மிக வேகமாகப் பரப்பப்பட்டு நம்ப வைக்கப்பட்டன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி நம்பிக்கை தரும் செய்திகளை... அதன் உண்மை விவரத்தை, அஞ்சாமையை வெளிப்படுத் தியது. கலைஞானத்தின் "கேரக்டர்' தொடர் ரொம்ப பெட்டர்.
___________
வாசகர் கடிதங்கள்!
வேண்டாமா?
குளத்தைக் காணோம், பள்ளி நிலத்தைக் காணோம்னு சொல்றீங்க... வாஸ்தவம்தான். ஆனா, இவற்றையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்து, ஊர் மக்களையே மிரட்டுவதாகச் சொல்லப்படுகிறவரின் கருத்து வேண்டாமா?
-எஸ்.கரோலின், பெரம்பலூர்.
யார் கண்டா?
"நீட்' தேர்வின் தொடக் கப்புள்ளியிலிருந்து மாணவப் பிள்ளைகளுக்கு ஏக மன உளைச்சலும் உயிரிழப்பும்தான். இப்ப நீட் தேர்வுல "ஆள் மாறாட்டம்'. இதுல இன்னும் எத்தனை பேர் இப்படி ஆள் மாறாட்டத்தில் ஓல்டு ஸ்டூடண்டாகி கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார் களோ? யார் கண்டா?
-சிவா, கருர்.