p

ளியவரின் காவலன்! துணைச் செயலாளர் தமிழ்நாடு ஓட்டுநர்கள் நலச்சங்கம் சென்னை.

ஓட்டுநராக இருப்பதால் பயணிகளுக்காக காத்திருக்கும் நேரங்களில் தூக்கம் வராமலிருக்க புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அப்போது நக்கீரனின் செய்திகளை படிக்க ஆரம்பித்து விட்டால் சூடான தேநீர் குடித்த சுறுசுறுப்பு உடம்புக்குள் புகுந்தது போல் உற்சாகமாகிவிடுவேன். அரசியல் தொடர்பான நிகழ்வு களை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும், மற்றவர்களிடம் இதுகுறித்து பேசவும் நக்கீரன் படிப்பேன். பல நேரங்களில் எனது சகநண்பர்களிடம் பல அரசியல் தகவல்களைச் சொல்லி ஆச்சரி யப்பட வைப் பேன். அதற்குக் காரணம் நக்கீரன் தான். காவல் துறையிலுள்ள வர்கள் எங்களைப் போன்ற டிரைவர்களை நடத்தும்விதம் மிகவும் கொடுமையானது. எல்லா காவலர்களையும் குறை சொல்லவில்லை, நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அதுபோன்ற அதிகார வர்க்கத்திலுள்ளவர்களின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளிவரும்போது மிகுந்த ஆறுதலாக இருக்கும். யாருமே கேள்வி கேட்க முடியாதவர்களை நக்கீரன் கேள்வி கேட்கிறதே என நினைக்கும்போது நாமே அதிகார வர்க்கத்தை சட்டையைப் பிடித்து கேள்விகேட்டதுபோல் இருக்கும். எளியவரின் காவலனாக இருக்கிறது நக்கீரன்.

2019, மார்ச் 30 - ஏப்.-02

Advertisment

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் அடங்குவதற் குள்ளேயே கோவை சிறுமி பாலியல் கொலை செய்தி நெஞ்சை பதறவைக்கிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் வெறும் வீடியோ எடுத்து மிரட்டியது மட்டுமில்லை. கந்துவட்டி, ப்ளாக்மெயில், ரவுடியிசம், கொலைகள் என இதற்குப் பின்னால் இன்னும் நிறைய உண்மைகள் வெளி வரப்போகிறது. அனைத்தையும் நக்கீரன் தோண்டி எடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. "மாடியில் கஞ்சா விற்ற எஞ்சினியர் கைது' என்ற செய்திக்கு "வேலையும் தரமாட்டானுக; விவசாயம் பண்ணவும் விடமாட்டானுங்க' என்ற கிண்டலான பதிலாக "வலைவீச்சு' பகுதியில் இடம் பெற்றிருந்தாலும் வேலையில்லாத இளைஞர்களின் வேதனையை வெளிப்படுத்துகிறது.

______________

வாசகர் கடிதங்கள்!

Advertisment

கவனிப்பு!

பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்களாக தினகரனும் கமலும் செயல்படுவதாக நீங்கள் விமர்சனப்படுத்தி யிருக்கிறீர்கள். இது தேர்தல் நேர அரசியலில் இன்னபிற கட்சிகளைக் கூர்ந்து கவனிக்க வைத்துவிட்டது.

-வ.தேவராஜன், கோயம்புத்தூர்.

முன்வைப்பு!

மத்தியில் ஒரு நிலையான அரசு ஆட்சி செய்யும்போது... அதன் கீழ் உள்ள மாநிலங்கள் எப்படியெல்லாம் தீமைகளை அனுபவிக்கின்றன, தத்தம் கருத்துகளால் முரண்படுகின்றன என்பதை பல்வேறு தரவுகளுடன் முன்வைத்திருக்கிறார் பழ.கருப்பையா.

-எல்.சசிரேகா, மதுரை.