கல்லூரிக் காலத்திலிருந்தே நக்கீரன் இதழுடன் எனக்கு தொடர்பு இருக்கிறது. பிற பத்திரி கைகளில் நான் படிக்கும் செய்தி களின் பாணிக்கும், அதே செய்தி யை நக்கீரன் தரும் பாணிக்கும் நிறைய வேறுபாடு இருக்கும்.
"பிஹைண்ட் தி நியூஸ்' என்ற பாணியில் செய்திக்கு பின் னால் நடந்த உண்மைகளில் நக்கீரன் தனது முத்திரையை பதிக்கும். அதுதான் படிக்கவே சுவாரஸ்யத்தை கூட்டும். மற்ற பத்திரிகைகள் சாதாரணமாக கடந்து சென்ற ஒரு நிகழ்வின் உண்மையான பின்னணியையும் நமக்கு உணர்த்தும். ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப்படும் பத்திரிகையின் நேர்மைக்கு நக்கீரனை உதாரணமாக கொள்ளமுடியும். சமூகத்தின் எந்தப் பகுதியில் யார் பாதிக்கப்பட்டாலும் பாதிக்கப் பட்டவர்களின் பக்கமே நக்கீரன் நிற்கும் என்பது தமிழகம் அறிந்த உண்மை.
பொடாச் சட்டத்தையே தூளாக்கி வெளியே வந்தவர் நக்கீரன் ஆசிரியர். அரசியல் பத்திரிகை நடத்துவது சாதாரணமில்லை. நக்கீரன் என்றும் பொய் எழுதியதில்லை. ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை வெளியிட்டதில்லை என்பதே அனைத்துக் கட்சித் தலைவர்களின் பிரியத்துக்கு காரணம் என்று தி.மு.க.வைச் சேர்ந்த எனது தந்தை பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
2019, செப்டம்பர் 14-17 இதழ்:
இந்த இதழிலும் முதல்வர் எடப்பாடி மற் றும் தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து புனையப்பட்ட பிரம்மாண்டங்களின் உண்மைப் பின்னணியை சேகரித்து தொகுத் துக் கொடுத்திருக்கிறது நக்கீரன்.
மாவலி பதில்களில் காந்திக் கும் ஜின்னாவுக்கும் இடையி லான உறவுகுறித்த தகவல்கள் எனக்கு புதிதாக இருக்கிறது. கதாசிரியர் கலைஞானம் எழுதும் "கேரக்டர்' தொடர் அவருடைய அனுபவங்களை வெளிப்படுத்துகிறது. காஷ்மீர் பிரச்சனையையும் சிறப்பு அந்தஸ்து பெற்ற நாகாலாந்து மாநிலம் உள்ளிட்ட மாநிலங் களையும் ஒப்பிட்டு பழ.கருப் பையா எழுதியிருக்கும் கட்டுரை அருமை.
_____________
வாசகர் கடிதங்கள்!
"தம் டீ' தினகரன்!
கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களிடம் சமரசம் பேசப்போன பெங்களூரு புகழேந்தியிடம் விளக்கம் கேட்டு தலைமைக் கழகம் சமாதானப் படுத்தியிருக்க வேண்டும். அதைவிடுத்து, அவரது பேச்சை கட்சி ஐ.டி. விங் ஃபேஸ்புக்கில் வெளியிடுவது அநாகரிகம். தினகரன் இதே அலைவரிசையில் செயல்பட்டால், யாரும் இல்லாத அ.ம.மு.க. எனும் டீக்கடையில் தனக்குத்தானே "தம் டீ' அடிக்க வேண்டியதுதான்.
-எஸ்.சிவலிங்கம், ஒரத்தநாடு.
நல்லாவா இருக்கு!
திரிபாதிக்கு டி.ஜி.பி. பதவியைத் தந்தது டெல்லி. இதை விரும்பாத தமிழக அரசு, டி.ஜி.பி. யின் அதிகாரத்தில் தன் நாடகத்தைப் போட்டுக் காட்டுகிறது. உளவுத்துறை ஐ.ஜி.க்குத் தெரிந்த ஒரு விஷயம் டி.ஜி.பி.க்குத் தெரியலன்னா நல்லாவா இருக்கும்?
-கே.மணிகண்டன், திருப்பூர்.