Skip to main content

பார்வை..!-அ.முருகதாஸ்

parvai

னக்கும் நக்கீரனுக்குமான தொடர்பு ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலானது. அரசியல் பற்று அதிகம் கொண்ட நான் அன்றுமுதல் இன்றுவரை நக்கீரனின் கருத்துக் கணிப்பை பார்த்தாலே முடிவு செய்து விடுவேன் அடுத்த ஆட்சி யார்..? என்பதை..! 100% உண்மை, நேர்மை, துணிவு.!

சோதனைக் காலங்களிலும் தன் நிலை மாறாமல் நேர்மையாக உண்மையை மக்களுக்கு எடுத்து வைக்கும் ஆசிரியர் நக்கீரன் கோபால் அவர்களின் தியாகம் போற்றுதலுக்கு உரியது. இன்றும் எத்தனையோ தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வந்தாலும் என் மனதில் உண்மை மற்றும் நேர்மையை துணிவுடன் மக்களுக்குச் சொல்வது நக்கீரனே என்பதில் பெருமை கொள்கிறேன்.

இரு மாநில அரசுகளை ஆட்டிப்படைத்த வீரப்பன் செய்தி முதல், ஜெ. மரணத்தின் உண்மை நிலை, திட்டமிட்டு மக்களை கொலை செய்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வரை வரும் செய்தி களில் உள்ள உண்மைகளால் நக்கீரனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பை என்றும் மறக்க முடியாது.

2018, ஜூன் 9-12 இதழ் :

"ஆட்சிக்கு கமிஷன்.! கோச்சிங் கொள்ளை..!!!' என தலைப்பிட்டு கடந்த இதழில் வெளி வந்த "நக்கீரன்' இதழின் கருத்துகளை பார்க்கும் போதே நன்கு தெரிகின்றது ஆள் பவர்களால் நாட்டில் இருக்கும் அவலம். திராவிட மண்ணில் கால்ஊன்றத் துடிக்கும் பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களை பொம்மலாட்ட பொம்மைகள் போல இயக்கி, தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முனையும் நடவடிக்கை மிக மிக கண்டிக்கத்தக்கது.

_____________
வாசகர் கடிதங்கள்!

சுயநோக்கு திட்டம்!

"எங்க ஆத்தா ஆடு வளத்தாக, மாடு வளத்தாக'னு ஜெ. வளர்த்த நமத்துப் போன திட்டங்களை எடுத்துக்காட்டி, நாட்டுக்கோழி கொடுத்து ஓட்டுக் கணக்கை அறுவடை பண்ணப் பார்க்கிறாரு எடப்பாடி. தேர்தல் வரும் முன் ஆட்சியை பாதுகாக்கும் இந்த சுயநோக்கு இலவசத் திட்டத்துக்கு மக்கள் பஞ்சாரத்தோடு சென்றுவிடக் கூடாதுதான்.

-ஆ.சுந்தரேசன், தட்டான்சாவடி.

"காலா'வின் அரசியல்!

மும்பை- தாராவி மக்களின் நிலம் சார்ந்த அரசியலை முன்னெடுக்கும் "காலா' பற்றி பேசுகிற நக்கீரனின் விமர்சனம் ஏற்றம் இறக்கமில்லாதது. எனினும், "காலா' படத்தில் பெரியார் சிலை காட்டப்படுவதை கவனிக்காமல், அதற்கு மாறாக நக்கீரனில் பதிவாகி யிருப்பது சற்று வருத்தம்தான்.

-சி.பாபு,காரைக்குடி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்