parvai

ல்வி, புகழ், வசதி வாய்ப்புகள், செல்வாக்கு, சமூகப் பங்களிப்புகள் மற்றும் மக்கள் தொடர்புகளில் ஒரு மனிதர் எத்தகைய உச்சத்தைத் தொட்டாலும் அவருடைய இயற்கை அறிவும் பண்பும் அவரை விட்டு அகல்வதில்லை என்பதற்கு ஆசிரியர் நக்கீரன்கோபால் மிகச்சிறந்த சான்று.

நக்கீரன் இதழ் பிறக்கும்முன்பே நக்கீரன் ஆசிரியருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இருவரும் "பட்டர்பிளை'யின் முன்னாள் ஊழியர்கள். அதனால் அவரது குணநலன் பற்றி என்னால் தெளிந்து சொல்ல முடிகிறது.

எங்கள் குடும்பமே நக்கீரன் வாசகர் குடும்பம்தான். இரண்டு வருடம் முன்பு என் தந்தை இயற்கை எய்திவிட்டார். தொலைக்காட்சி, தினத்தாள்கள் என எத்தனைதான் இருப்பினும், அவரால் நக்கீரன் படிக்காமல் இருக்கவே முடியாது. புதனும் சனியும் தொழிற்சாலைக்கு போன்வரும். ""தம்பி, மறக்காமல் நக்கீரன் வாங்கி வா'' என்பார். அப்பா படித்து, அம்மா படித்து, குழந்தைகள் படித்து... என் கைக்கு வர மறுநாள் ஆகிவிடும். இந்த நிமிடமும் என் குடும்பம் நக்கீரன் குடும்பமே!

Advertisment

என் அம்மா ஆச்சரியத்தோடு ஒருநாள் சொன்னது... இன்னும் என் சிந்தையில் தேங்கி நிற்கிறது. ""நக்கீரனைப் பாரு! மகரஜோதி சபரிமலையில் தானாக எரிந்து ஜோதி காட்டுவதாக நம்பிக்கொண்டிருந்தோமே... இப்படித்தான் ஏற்றிக்கொண்டிருக்கிறார்களா?'' என்று வியந்தார். வாசகர்களின் சார்பாக நிற்பது மட்டுமின்றி, வாசகர்களின் அறியாமையைப் போக்குவதுதான் நக்கீரன் பணி.

2018, ஏப்.20-22 இதழ்:

"புலனாய்வுப் பயணத்தில் புயல்வேக 30 ஆண்டுகள்' கடிதக் கட்டுரை பிரமிப்பூட்டுகிறது. இது சுயபுராணமல்ல. புடம்போட்ட வரலாறு. வடுக்கள் நிறைந்த வரலாறு. நக்கீரனோடு நடந்துவரும் ஒவ்வொருவரும் நன்றாக அறிந்த வரலாறு. மயிர்க்கால்கள் சிலிர்த்து புல்லரித்தது எனக்கு. மாதம் மூன்று முறையாவது சத்தியமங்கலம், கோபி கோர்ட்டுக்கு வருவார் ஆசிரியர். 22 வழக்குகள் அப்போது. இந்த இரண்டு கோர்ட்டுகளிலும்... அடடா... நக்கீரன் நடத்திய நீதிப் போராட்டம் இந்திய வரலாற்றிலேயே எழுதப்பட வேண்டியது.

Advertisment

31-ஆவது வயதில் காலெடுத்து வைக்கும் நக்கீரனுக்கு, வாசகர்களாகிய தமிழர்கள்தான் விழா எடுத்து வாழ்த்திக் கொண்டாடவேண்டும். "பூனைக்கு மணி கட்டியதில்' இருந்து "பாலியல் வீச்சு' வரை படித்துவிட்டுத்தான் இதழை கீழே வைத்தேன்.

-------------------------------------------

வாசகர் கடிதங்கள்!

இணையத்தில் சுற்றுலா!

ஏலகிரி, ஏழைகளின் சொர்க்கபுரியாக இல்லாமல்... ஏலகிரி -பணக்காரர்களுக்கு மட்டுமே நலம் நலமறிய ஆவலாக இருக்கிறதுபோல. இந்நிலையே நீடித்தால் சுற்றுலாப் பயணிகள் இணையத்தின்முன் அமர்ந்து அதன் சுற்றுலா சுகவாசத்தை அனுபவிக்க வேண்டியதுதான்.

-கரு.முத்து, தேனி.

ஸ்லீப்பர் செல்களின் விசுவாசம்!

அ.ம.மு.க.வின் தினகரன், மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்டளை கலித்துறை பாடுகிறார். ஒவ்வொரு தகவலும் ஸ்லீப்பர் செல்கள் இன்னமும் அவரிடம் விசுவாசம் காட்டுகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.

-ஆ.மணிகண்டன், சென்னை-31.