Skip to main content

பார்வை!- டாக்டர் அ. பிளாட்பின்

ஜெரூஷ் பல் மற்றும் முகச்சீரமைப்பு மையம் தக்கலை.

க்கீரன், என் இளம்வயது முதலே என்னைக் கவர்ந்த பத்திரிகை. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என இன்றுவரை தனது குறிக்கோளிலிருந்து சிறிதும் பிறழாமல் சமூக அவலங்களை எதற்கும் யாருக்கும் பயப்படாமல் வெளிக்கொணர்ந்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது.

பெண்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் கும்பலையும், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன் முதன்மை இதழாகப் பயணிக்கிறது. தவறிழைக்கும் சாமியார்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே இதழ் நக்கீரன்தான். நக்கீரனின் துணிவு, சமூகக் கடமை, அரசியல் நையாண்டி போன்ற செயல்பாடுகள் ஆயுதம் தாங்காத எழுத்துப் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்த்துகிறது. 31 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிநடை போடும் நக்கீரனின் துணிவைப் பாராட்டுகிறேன்.

2018, ஜூன் 02-05 இதழ்:

ரஜினிகாந்த்தின் கண் கண்ணாடியில் ஒருபுறம் துப்பாக்கி ஏந்திய போலீஸ், மறுபுறம் துப்பாக்கி குண்டுக்கு பலியான இளம் பெண்ணின் படத்துடன் வெளியான அட்டைப்படம் அவர் உள்ளிருப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

"மிட்நைட் மசாலா' பகுதிக்குள் அழகிய மெரினாவின் இன்னொரு முகம் பயம் ஊட்டுவதாக அமைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவாலயத்தில் நடத்திய போட்டி சட்டமன்ற கூட்டத்தில் விவாதித்த விரிவான கருத்துகளுடன், போட்டி சட்டமன்றக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவதை திமு.க எம்.எல்.ஏ.க்களே விரும்பவில்லை என்ற தகவலோடு, போட்டிக் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினால் காமெடியாகிவிடும் என்று பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.

புதிய இளம் நிருபர்களை உருவாக்கி அளித்த பயிற்சியில் நக்கீரனின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை விளக்கிய விதம் வியக்க வைத்தது. நம்மை வியக்க வைக்கிறது. "கால் மேல் கால் போட்டதால் 3 கொலைகள்' என்ற செய்தியைப் படிக்கும்போது இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ சாதியை ஒழிக்க என்ற ஆதங்கமே பிறக்கிறது.

"நிறம் மாறிய ரஜினி'’-ராகவேந்திரர் பக்தர் எப்படி பாபா பக்தராக மாறினார் என்பதையும் அவர் ஏன் சந்தனக் கலர் ஜிப்பாவுக்கு மாறினார் என்ற செய்தியும் புதுசு.

-------------------------

வாசகர் கடிதங்கள்!

தீர்ப்பு நட்டமே!

தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களை களவாட நினைக்கிறார் எடப்பாடி. அதேபோல முதல்வருடைய உப்பரிகையின் கீழ் உள்ள அமைச்சர்கள், தினகரனிடம் பவ்யம் காட்டுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு இருவரில் ஒருவருக்கு சாதகம்தான். எனினும், இதனால் மக்களுக்கு நன்மை விளையப்போவதில்லை; நட்டமே!

-செ.அருள்குமார், விருத்தாசலம்.

சுறுசுறுப்பான அக்கறை!

மோடியின் நான்காண்டு ஆட்சியில் தீட்டப்பட்ட ஒவ்வொரு திட்டமும் சோதனை ஓட்டத்தில்தான் இருக்கிறது. இந்த நிலையிலும், ஒவ்வொரு நாடாகச் சுற்றுலா போகிற தேச நலன் மீதான அவரது சுறுசுறுப்பான அக்கறையைப் பாராட்டத்தான் வேண்டும்.

-வா.அக்பர், வாழப்பாடி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்