நக்கீரன் தொடங்கி 32 ஆண்டுகளில் ஆட்சியில் எவர் இருந்தாலும் பாரபட்ச மின்றி நடுநிலையோடு நியாயத்தை, நேர்மையை, நீதியை வெளிப்படுத்தி அரசியல் பத்திரிகை உலகில் வெற்றி நடை போடும் நக்கீரனை எவ்வளவு பாராட்டி னாலும் தகும்.
சாதாரணமாக தேநீர் கடையில் பேசுபவர்கள் கூட "நக்கீரன்லயே வந்திருக்கு..' என்று சொல்லுமளவுக்கு நம்பகத்தன்மை யுடன் இன்றுவரை இயங்குகிறது நக்கீரன்.
அன்றாட அரசியல் விமர்சனத்திற்கான பத்திரிகையாக மட்டுமல்லாமல் சமூகம், அரசியல், கலை, இலக்கியம் தொடர்பான நூல்களை படித்து எளிய மக்களின் சிந்தனை விசாலமாக வேண்டும்' எனும் நோக்கத்தில் குறைந்த விலையில் தரமான புத்தகங்களை யும் நக்கீரன் பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருவது எழுத்துலகம் போற்றக்கூடிய செய்கையாகும்.
டிசம்பர் 11-13 இதழ் :…
எனக்கென்று ஒரு நாடு, என் மக்கள்’ என்று பழனி முருகன் சொன்னதை போல் இருக்கிறது நித்தியின் கதை. அவ்வளவும் ஈசன் பெயரில் நடக்கும் பித்தலாட்டம் என நக்கீரன் தோலுரிக்கிறது
பழ.கருப்பையாவின் ‘"அடுத்த கட்டம்'’ என்ற அரசியல் சமூக தொடர் கொஞ்சமும் சூடு குறையாமல் செல்கிறது.
எனக்கு அது இல்லை, இது இல்லை’ என புலம்பும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் பிரணவ் குறித்த செய்தி தன்னம்பிக் கையை வளர்க்கிறது.
வளரும் இளைய சமுதாயத்திற்கு நல்ல விஷயங்களை பதிய வைக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி யின் "அடுத்த சாட்டை' குறித்த அக்கறையுட னான பார்வை அருமை.
மொத்தத் தில் நக்கீரன் இதழை எடுத்து பிரித் ததும் தெரிய வில்லை, படித்து முடித்ததும் தெரியவில்லை.
____________
வாசகர் கடிதங்கள்!
தொங்கு பாலத்தில் ஜி.எஸ்.டி.!
ஜி.எஸ்.டி. வரியை சமாளிக்க முடியாமல் பலியானவர்களின் எண்ணிக்கையில் இப்போது ஈரோடு ஜவுளித் தொழில் கனகராஜும் இணைந்திருக்கிறார். இதுவரையான வரி விதிப்புக்கே இந்தியாவின் பொருளாதாரப் பலன் தொங்கு பாலத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெங்காயத்துல, ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்த பஞ்சாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
-ஆர்.எஸ்.மணிமேகலை, ராசிபுரம்.
பதுங்காத உண்மை!
சிலைக் கடத்தலில் ஈடுபட்டவர்களை அடையாளப்படுத்தியதற்கான "காப்புரிமை' பொன்.மாணிக்கவேலுக்கானது என சித்தரிக்கப்பட்டு வருகிறது. திலகவதி, திரிபாதி ஐ.பி.எஸ்.கள் அவருக்கு முன்பாகவே சர்வதேச குற்றவாளியான சஞ்சீவி அசோகன் போன்றவர்களை வெளிச்சப்படுத்தி விட்டார்கள். பாராட்டுவதில் ஓரவஞ்சனை கூடாது என்கிற மாவலியின் தகவல், இருட்டுக்குள் உண்மை பதுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை நியாயப்படுத்து கிறது.
-ஆர்.சிவா, காஞ்சிபுரம்