துப்பறியும் உத்தி! -மு.மாறன் திரைப்பட இயக்குநர் சென்னை. பள்ளி சென்ற காலத்திலேயே நான் நக்கீரன் வாசகன். என்னை மிகவும் ஈர்த்தது; ஈர்ப்பது அதன் புலனாய்வுத் தன்மை. ஒரு துப்பறியும் நாவலைப் போன்ற பரபரப்புடன் தென்படும் கட்டுரைகள் எதிர்பாராத க்ளைமாக்ஸ்போல் முத்தாய்ப்பாக முடிவதை எண்ணி பலநாட்கள் வியந்திருக்கிறேன்.
என்னைப் போன்ற திரைக்கதை ஆசிரியர்களுக்கு நக்கீரனில் வரும் கட்டுரைகள் அனைத்தும் பாடங்கள். அரசியல், சமூகம், க்ரைம் என்று எந்த டாபிக்கைத் த
துப்பறியும் உத்தி! -மு.மாறன் திரைப்பட இயக்குநர் சென்னை. பள்ளி சென்ற காலத்திலேயே நான் நக்கீரன் வாசகன். என்னை மிகவும் ஈர்த்தது; ஈர்ப்பது அதன் புலனாய்வுத் தன்மை. ஒரு துப்பறியும் நாவலைப் போன்ற பரபரப்புடன் தென்படும் கட்டுரைகள் எதிர்பாராத க்ளைமாக்ஸ்போல் முத்தாய்ப்பாக முடிவதை எண்ணி பலநாட்கள் வியந்திருக்கிறேன்.
என்னைப் போன்ற திரைக்கதை ஆசிரியர்களுக்கு நக்கீரனில் வரும் கட்டுரைகள் அனைத்தும் பாடங்கள். அரசியல், சமூகம், க்ரைம் என்று எந்த டாபிக்கைத் தொட்டாலும் அதில் ஒரு சுவாரஸ்யமான கதைக்கரு ஒளிந்திருக்கும். அங்கே இங்கே கொஞ்சம் மாற்றி ஜனரஞ்சக அம்சங்களை தூவினால் அருமையான திரைக்கதையை தயார் செய்துவிடலாம். எனது முதல் படமான ‘"இரவுக்கு ஆயிரம் கண்கள்'’ படத்தில் வந்த ஒரு க்ரைம் பகுதி, நக்கீரனில் எப்போதோ படித்த செய்தி ஒன்றின் பாதிப்பே!
ஒரு சி.ஐ.டி. போலீஸின் துப்பறியும் உத்திக்கு எள்ளளவும் குறைந்ததல்ல நக்கீரன் நிருபர்களின் புலனாய்வுப் பணி. செய்தியின் பின்னால் மறைந்திருக்கும் மர்மங்களை முடிச்சு முடிச்சாக அவிழ்ப்பதிலாகட்டும், அச்செய்தியின் உண்மைத் தன்மையினால் ஏற்படும் சிரமங்களை வாசகர்களுக்காக எதிர்கொள்வதிலாகட்டும் நக்கீரனுக்கு நிகர் நக்கீரனே.
2018, மே 20-22 இதழ் :
தமிழ்வாணனின் சங்கர்லாலைப்போல் நக்கீரனின் சங்கர்லாலும் எப்போதுமே என்னை வசீகரிக்கக்கூடியவர். ஊர் கூடி எதிர்த்த சூரப்பாவை ஊரே மறந்தாலும் நக்கீரன் மறக்கவில்லை; மறக்கவும் செய்யாது. சூரப்பாவின் ஒருமாத பணியை உரைத்த விதம் அவர்மீது லேசான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. டாஸ்மாக்கை விட்டுவிட்டு பள்ளிகளை மூடச்சொல்லும் அரசை என்னவென்று சொல்வது? வீடு வீடாகச் சென்று மாணவர்களை படிக்க அழைத்துவரும் ஆசிரியர்கள், தெய்வங்களுக்கு ஒப்பானவர்கள்.
வாசகர் கடிதங்கள்!
கறி சிரிச்சிருக்கும்!
"ஓர் இனத்தை முறிக்க முதலில் மொழியின் கழுத்தை நெரி' என்கிற வரிகளுக்கு உடந்தையாகியிருக்கிறார் அமைச்சர் மாஃபா. பதவி அதிகாரம் இருந்தால் "தமிழ் இருக்கை'க்கான மக்கள் பணத்தில் உரிமை கொண்டாடலாமா? என்னங்க சார் உங்க ஞாயம்? சங்கம் வைத்து தமிழை வளர்த்த "பாண்டியன்' பெயரைச் சூட்டியிருக்கீங்க. இந்நேரம் அமெரிக்காவில் தமிழக ஆட்சியின் கறி சந்தி சிரிச்சிருக்கும் போங்க.
-வ.அர்ஜுனன், கள்ளக்குறிச்சி.
வாம்மா புதுக்கட்சி!
வாம்மா "பிக் பாஸ்' ஜூலி, உன் பங்குக்கு நீயும் கட்சி ஆரம்பிக்கிறியா... நல்லா ஆரம்பி! ஆசிர்வாதம் ஆசிர்வாதம்! கொத்தவரங்கா கூட்டு வைக்க புத்தகத்தைப் பார்க்கிறோம்ல அப்படித்தான்னு அரசியலைப் பற்றி நீ நினைச்சா, தப்பு தாயி தப்பு... தப்பு... கன்னத்துல போட்டுக்க!
-வா.அலமேலு, புதுக்கோட்டை.