ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி அ.தி.மு.க.வின் தெற்கு மா.செ.வுமான எஸ்.பி.சண்முக நாதனின் உடன்பிறந்த தம்பி எஸ்.டி.ஜார்ஜ் மற்றும் அவரது அண்ணன் மகனான சுந்தர் ராஜ் இருவரும் அ.தி.மு.க. விலிருந்து விலக
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.வும், தூத்துக்குடி அ.தி.மு.க.வின் தெற்கு மா.செ.வுமான எஸ்.பி.சண்முக நாதனின் உடன்பிறந்த தம்பி எஸ்.டி.ஜார்ஜ் மற்றும் அவரது அண்ணன் மகனான சுந்தர் ராஜ் இருவரும் அ.தி.மு.க. விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தது தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க.வில் ஹைவோல்ட் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது. தி.மு.க.வின் மா.செ.வும் திருச்செந் தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மூலமாக அவர்கள் இணைந்துவிட்டார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/admk_50.jpg)
மாஜி அமைச்சர், மா.செ., கட்சியின் செல்வாக்கான புள்ளியான சண்முகநாதனுக்கு சகலமும் இந்த இருவர்தான். என்னதான் அரசியலில் வளம், வளர்ச்சி போன்றவற்றில் உச்சம் கண்டாலும் சண்முகநாதன் இவர்களை கருவேப்பிலையாகவே பயன்படுத்தி வந்தது இவர்களுக்குள் கசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு களின் வேட்பாளர்கள் சீட் ஒதுக்கும் விவகாரத் தில் இவர்களிடம் அ.தி.மு.க.வின் விசுவாசிகளே புலம்பியது மட்டுமல்லாமல், அண்மைக்கால மாக அவரது நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாறுதல்களும் தளபதிகளுக்குப் பிடிக்காமல் போனது. சுந்தர்ராஜனிடம் நாம் கேட்ட போது... ""பிறகு பேசுகிறேனே'' என்றார்.
-ப.இராம்குமார்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us